அனைத்து நிறுவனங்களுக்கும் நாளை ஊதியத்துடன் விடுப்பு: தொழிலாளர் நலத்துறை உத்தரவு

தேர்தல் வாக்குப் பதிவு தினமான வியாழக்கிழமை (ஏப்ரல் 18) அனைத்து நிறுவனங்களுக்கும் விடுமுறை விட வேண்டுமென தொழிலாளர் நலத் துறை உத்தரவிட்டுள்ளது.
அனைத்து நிறுவனங்களுக்கும் நாளை ஊதியத்துடன் விடுப்பு: தொழிலாளர் நலத்துறை உத்தரவு

தேர்தல் வாக்குப் பதிவு தினமான வியாழக்கிழமை (ஏப்ரல் 18) அனைத்து நிறுவனங்களுக்கும் விடுமுறை விட வேண்டுமென தொழிலாளர் நலத் துறை உத்தரவிட்டுள்ளது.
 இதுகுறித்து, தொழிலாளர் நலத் துறை ஆணையாளர் ஆர்.நந்தகோபால் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவு: தமிழகத்தில் மக்களவை, 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அன்றைய தினத்தில் தமிழகம் முழுவதும் உள்ள தொழில், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், கடைகள், தொழிற்சாலைகள், பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய ஒருநாள் விடுப்பு அளிக்க வேண்டும்.
 தேர்தல் நடைபெறும் நாளில் விடுமுறை அளிக்கத் தவறும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து புகார் அளிக்க மாவட்ட, மாநில அளவில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதிலுள்ள அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு புகார்களைத் தெரிவிக்கலாம்.
 அதிகாரிகள் விவரம், தொலைபேசி எண்கள்
 மாநில அளவிலான ஒருங்கிணைப்பாளர்
 சு.பொன்னுசாமி-96001 98875
 தே.விமலநாதன் 87782 70221
 டி.புனிதவதி 97869 10097
 வெற்றிச்செல்வி 98401 20925
 ஜெயலட்சுமி 95001 71623
 ஜானகிராமன் 86103 08192

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com