அமைச்சர் குறித்து மு.க.ஸ்டாலின் பேச்சு: தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு

தமிழக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுவதற்கு இடைக்கால தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுத்து, வழக்கின் விசாரணையை வரும் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

தமிழக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுவதற்கு இடைக்கால தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுத்து, வழக்கின் விசாரணையை வரும் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
 சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மனுவில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 4-ஆம் தேதி கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர், குனியமுத்தூர், பொள்ளாச்சி ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொண்டபோது, உள்ளாட்சி அமைப்புகளின் ஒப்பந்த பணிகள் அனைத்தும் எனது உறவினர்களுக்கும், பினாமிகளுக்கும் வழங்கப்படுவதாகவும், இதன் மூலம், நான் ஊழல் செய்வதாகவும் பேசியுள்ளார். என் மீது, ஸ்டாலின் சுமத்தும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை. மேலும், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை, நான் காப்பாற்றி வருவதாகவும் தேர்தல் பிரசாரத்தில் ஸ்டாலின் பேசுகிறார்.
 அவரது பேச்சை சமூக ஊடகங்களில் வெளியிடுகின்றனர். எனவே, என்னைப் பற்றி தேர்தல் பிரசாரத்தின்போது, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறி அவதூறாக பேசுவதற்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தடை விதிக்க வேண்டும். என்னை அவதூறாக பேசியதற்காக ரூ.1 கோடி மானநஷ்ட ஈடு வழங்கவும் உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்கம் அமைச்சர் குறித்து மு.க.ஸ்டாலின் பேச தடை விதிக்க மறுத்துவிட்டது.
 இதையடுத்து, செவ்வாய்க்கிழமை இந்த வழக்கு, நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் வேலுமணி குறித்து பேச மு.க.ஸ்டாலினுக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதி, மனு தொடர்பாக மு.க.ஸ்டாலின் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com