பிளஸ் 2 தேர்வு: மாநகராட்சி பள்ளி மாணவர்கள் 94% தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வில் சென்னை மாநகராட்சி பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 93.73 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். நான்கு பள்ளிகள் 100 சதவீத
பிளஸ் 2 தேர்வில் சென்னை பள்ளிகளில் நூறு சதவீத தேர்ச்சிக்கு பாடுபட்ட தலைமை ஆசிரியர்களை பாராட்டி, பள்ளிகளின் வளர்ச்சிக்காக தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலை வழங்கிய சென்னை மாநகராட்சி ஆணையர் 
பிளஸ் 2 தேர்வில் சென்னை பள்ளிகளில் நூறு சதவீத தேர்ச்சிக்கு பாடுபட்ட தலைமை ஆசிரியர்களை பாராட்டி, பள்ளிகளின் வளர்ச்சிக்காக தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலை வழங்கிய சென்னை மாநகராட்சி ஆணையர் 


பிளஸ் 2 பொதுத் தேர்வில் சென்னை மாநகராட்சி பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 93.73 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். நான்கு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் கூறியதாவது:
பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ் 32 மேல்நிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன.  கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற  பிளஸ் 2 பொதுத் தேர்வை மாநகராட்சிப் பள்ளி
களைச் சேர்ந்த 1,796 மாணவர்
களும், 3, 045 மாணவிகளும் எழுதினர். அதில், 1,534 மாணவர்கள், 2, 843 மாணவிகள் என மொத்தம் 4,377 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி விகிதம் 93.73 ஆகும். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 1.62 சதவீதம் அதிகமாகும்.
நிகழாண்டில், சுப்புராயன் தெரு, கோயம்பேடு, நெசப்பாக்கம், நுங்கம்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள 4 மாநகராட்சி பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி விகிதத்தை எட்டியுள்ளன. 
முக்கியப் பாடங்களில் 4 மாணவர்களும், 4 மாணவிகளும் சத
மடித்துள்ளனர். 7 பேர் 600-க்கு 550-க்கும் அதிகமான மதிப்பெண் பெற்றுள்ளனர். 500-க்கும் மேல் மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை 58-ஆக உள்ளது என்றார் அவர்.
முன்னதாக, சிறப்பாக செயல்பட்ட மாநகராட்சி பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு  ரூ. 1 லட்சத்துக்கான காசோலை மற்றும் புத்தகங்களை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வழங்கினார். 
அதுமட்டுமன்றி, பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வின்போது மாநகராட்சி  துணை ஆணையர் குமாரவேல் பாண்டியன், கல்வி அலுவலர் கோவிந்தசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com