வண்டலூர் பூங்காவில் அரிய வகை கரும் புலிக்குட்டிகள்: இன்று முதல் பார்வையிடலாம்

சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் பிறந்துள்ள அரியவகை இரண்டு கரும் புலிக்குட்டிகள், ஒரு வெள்ளைப் புலிக்குட்டி ஆகியவற்றை சனிக்கிழமை முதல் (ஏப்ரல் 20) பொதுமக்கள் பார்வையிடலாம்.
வண்டலூர் வன உயிரியல் பூங்காவில் சனிக்கிழமை முதல் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ள அரியவகை கரும் புலிக்குட்டிகள், வெள்ளைப் புலிக் குட்டி.
வண்டலூர் வன உயிரியல் பூங்காவில் சனிக்கிழமை முதல் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ள அரியவகை கரும் புலிக்குட்டிகள், வெள்ளைப் புலிக் குட்டி.


சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் பிறந்துள்ள அரியவகை இரண்டு கரும் புலிக்குட்டிகள், ஒரு வெள்ளைப் புலிக்குட்டி ஆகியவற்றை சனிக்கிழமை முதல் (ஏப்ரல் 20) பொதுமக்கள் பார்வையிடலாம்.

சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் யானைகள், புலிகள், பறவைகள் என மொத்தம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வன விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. 

இந்தப் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும்  நம்ருதா  என்ற வெள்ளைப் பெண் வங்கப் புலிக்கும், நகுலா என்ற ஆண் வங்கப் புலிக்கும் கடந்த ஜனவரி மாதம் 9-ஆம் தேதி அரிய வகையிலான இரண்டு கரும் புலிக்குட்டிகளும், ஒரு வெள்ளைப் புலிக் குட்டியும் பிறந்தன. இவை சனிக்கிழமை முதல் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன.

இதுகுறித்து வண்டலூர் பூங்கா அதிகாரிகள் கூறியதாவது: இந்த மூன்று புலிக்குட்டிகளில் ஒரு கரும் புலிக்குட்டியும், ஒரு வெள்ளைப் புலிக் குட்டியும் பெண்ணாகும். மற்றொரு கரும் புலிக்குட்டி ஆணாகும். இதில், இரண்டு குட்டிகளின் உடலில் உள்ள கருப்பு வரிகள் அடர் நிறத்தில் அருகருகே அமைந்துள்ளதால், பழுப்பு மஞ்சள் நிறம் மங்கிக் காணப்படும்.  இவை அகெளடி எனும் நிறமி மாற்றத்தால் வருவதாகும்.

இதன் காரணமாக இவை கரும்புலிகள் அல்லது கருமை நிறப் புலிகள்  என்று அழைக்கப்படுகின்றன. இந்தப் புலிக்குட்டிகள் கடந்த 4 மாதங்களாகத் தொடர் மருத்துவக்  கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தன. தற்போது, இக்குட்டிகள் அதன் தாயான நம்ருதாவுடன் விலங்கு கூடத்தில் விடப்பட்டுள்ளன. சனிக்கிழமை முதல் (ஏப்ரல் 20) இந்த புலிக்குட்டிகளை பொதுமக்கள் பார்வையிடலாம் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com