வரலாற்று ஆசிரியர்  எஸ்.முத்தையா காலமானார்

சென்னை குறித்த புகழ் பெற்ற பல வரலாற்று நூல்களை எழுதிய எஸ்.முத்தையா (89) உடல்நலக் குறைவு காரணமாக சனிக்கிழமை காலமானார். 

சென்னை குறித்த புகழ் பெற்ற பல வரலாற்று நூல்களை எழுதிய எஸ்.முத்தையா (89) உடல்நலக் குறைவு காரணமாக சனிக்கிழமை காலமானார். 
சிவகங்கை மாவட்டம், பள்ளத்தூரில்  பிறந்த முத்தையா, அமெரிக்காவில் உயர் படிப்பை முடித்து "நியூயார்க் டைம்ஸ்'  உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் பணியாற்றியுள்ளார்.  வரலாற்று ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வந்த அவர்,   20- க்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதியுள்ளார்.  "மெட்ராஸ் டிஸ்கவர்டு' (ஙஹக்ழ்ஹள் ஈண்ள்ஸ்ரீர்ஸ்ங்ழ்ங்க்) என்ற ஆங்கில  நூலை எழுதியுள்ளார்.  
சென்னையிலிருந்து மாதமிருமுறை வெளிவரும் "மெட்ராஸ் மியூசிங்ஸ்' இதழின் ஆசிரியராகச் செயல்பட்டு வந்த நிலையில் உடல் நலக்குறைவால் எஸ்.முத்தையா சனிக்கிழமை காலமானார்.  அவருக்கு, ரஞ்சனி, பார்வதி ஆகிய இரு மகள்கள் உள்ளனர். முத்தையாவின் மனைவி வள்ளியம்மை ஆச்சி கடந்த 2013-ஆம் ஆண்டு மறைந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com