இயன்முறை மருத்துவப் படிப்புகள்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

முதுநிலை இயன்முறை (பிசியோதெரபி) மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளதாக மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. 

முதுநிலை இயன்முறை (பிசியோதெரபி) மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளதாக மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. 
இதுதொடர்பாக மருத்துவக் கல்வி இயக்ககம்  வெளியி ட்ட அறிவிக்கை: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில், முதுநிலை இயன்முறை மருத்துவப் படிப்புகளுக்கு 800 இடங்கள் உள்ளன. அந்த இடங்களுக்கு வரும் 2019-20 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. நிகழாண்டு முதல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.  
அதன்படி www.tnhealth.org, www.tnmedicalselection.org  ஆகிய இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை வரும் 29-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com