இலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி: நட்சத்திர ஹோட்டல்களில் கூடுதல் பாதுகாப்பு

இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக, சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களின் பாதுகாப்பை அதிகரிக்குமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக, சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களின் பாதுகாப்பை அதிகரிக்குமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள கொச்சிக்கடை அந்தோணியார் தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவித்த தேவாலயம், மட்டக்களப்பு சியோன் தேவாலயம், நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்ட 8 இடங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததில் 300 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, இந்தியாவின் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இலங்கையையொட்டியுள்ள, தமிழக கடலோரப் பகுதிகளில் போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல இலங்கை துணைத் தூதரகம், புத்த மடம், இலங்கையைச் சேர்ந்த தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

நட்சத்திர ஹோட்டல்கள்:  சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களின் பாதுகாப்பைப் பலப்படுத்துமாறும், நட்சத்திர ஹோட்டல்களில் தங்கி இருப்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்படியும் பெருநகர காவல்துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். 

இதன் காரணமாக தேனாம்பேட்டை, எழும்பூர், பட்டினப்பாக்கம், ஆழ்வார்பேட்டை, அடையாறு, ராஜீவ் காந்தி சாலை ஆகிய பகுதிகளில்  உள்ள நட்சத்திர ஹோட்டல்களில்  பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முக்கியமாக, நட்சத்திர ஹோட்டல்களுக்கு தங்க வருபவர்களின் அடையாள அட்டை நகல் கண்டிப்பாக பெற வேண்டும், வெளிநாட்டு பயணிகளிடம் பாஸ்போர்ட் நகல் பெற வேண்டும், நட்சத்திர ஹோட்டலில் நடைபெறும் விருந்து, நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகிறவர்களின் வாகனங்கள், உடமைகள் ஆகியவற்றை கண்டிப்பாக முழுமையாக சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அதேபோல நட்சத்திர ஹோட்டல்களில் இருந்து வெளியே செல்கிறவர்களின் உடமைகளையும், வாகனங்களையும் சோதனை செய்ய வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. 

இந்த உத்தரவுகளை பெரும்பாலான நட்சத்திர ஹோட்டல் நிர்வாகங்கள் பின்பற்றுவதாகக் கூறப்படுகிறது.

அதேவேளையில், நட்சத்திர ஹோட்டல்களில் அவ்வப்போது திடீர் சோதனைகளை நடத்துமாறும் போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com