நடிகர் வீட்டில் திருட்டு

சென்னை அரும்பாக்கத்தில் வசிக்கும் நகைச்சுவை நடிகர் இமான் வீட்டில் வைத்திருந்த 41 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.
நடிகர் வீட்டில் திருட்டு

சென்னை அரும்பாக்கத்தில் வசிக்கும் நகைச்சுவை நடிகர் இமான் வீட்டில் வைத்திருந்த 41 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.
சென்னை, அரும்பாக்கம், வெங்கடகிருஷ்ணா நகர், ராஜீவ் காந்தி தெருவில் வசித்து வருபவர் நகைச்சுவை நடிகர் இமான் (49). கோடை விடுமுறையையொட்டி,  இவரது குடும்ப உறுப்பினர்கள் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டதால், அவர் மட்டும் வீட்டில்  இருந்து வருகிறார்.
கடந்த 19-ஆம் தேதி இமான் தான் அணிந்திருந்த 41 பவுன் எடையுள்ள 4 மோதிரங்கள், தங்கச் சங்கிலி, கைச்சங்கிலி ஆகியவற்றை வீட்டின் பீரோவில் வைத்துள்ளார். இந்நிலையில்,  செவ்வாய்க்கிழமை (ஏப். 23) பீரோவைத் திறந்து பார்த்தபோது, அங்கு வைக்கப்பட்டிருந்த நகைகள் திருடு  போனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீஸார் புதன்கிழமை  வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com