சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய திட்டங்களை அறிமுகம் செய்யும் லா அலெக்ரியா

சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள லா அலெக்ரியா சர்வதேச சுற்றுலா நிறுவனத்தின் சார்பில் செயல்படுத்தப்படும் புதிய சுற்றுலாத் திட்டங்கள்
சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய திட்டங்களை அறிமுகம் செய்யும் லா அலெக்ரியா



சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள லா அலெக்ரியா சர்வதேச சுற்றுலா நிறுவனத்தின் சார்பில் செயல்படுத்தப்படும் புதிய சுற்றுலாத் திட்டங்கள் சுற்றுலா செல்வோர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக, நடுத்தர குடும்பத்தினர் மற்றும் முதல்முறை சுற்றுலா செல்வோருக்காக ஏராளமான புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. 

அதன்படி தற்பொழுது ஒரு டூரு மூணு டீலு என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. வாடிக்கையாளர்களும் சுற்றுலாவுக்காக முன் பதிவு செய்து வருகின்றனர்

இப்புதிய சுற்றுலாத் திட்டங்களைப் பற்றி லா அலெக்ரியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ந. திருமுருகன் கூறும்போது, சுதந்திர தின விடுமுறை முதல் பூஜை விடுமுறை, கிறிஸ்துமஸ் விடுமுறை, பொங்கல் விடுமுறை, மற்றும் கோடை விடுமுறை  தினங்களில் பல்வேறு நாடுகளுக்கு குறைந்த கட்டணத்தில் சுற்றுலா செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.  

குறிப்பாக காதலர் தினம் 2020-ஆம் ஆண்டின் இளம் தம்பதிகளுக்கான சுற்றுலாவும், மகளிர் தினம் 2020-ஆம் ஆண்டில் மகளிர் பங்கு பெறும் சுற்றுலாவுக்கும் ஏற்பாடு செய்து வருகிறோம். 

இந்த சுற்றுலாக்களைக் குறைந்த கட்டணத்தில் வாடிக்கையாளர்கள் சிங்கப்பூர், மலேஷியா, தாய்லாந்து, இலங்கை, இந்தோனேஷியா, வியத்நாம், கம்போடியா போன்ற நாடுகளுக்கும், தில்லி, காஷ்மீர், சிம்லா , கோவா, அந்தமான் போன்ற நகரங்களுக்கும் குடும்பத்துடன் சந்தோஷமாக சுற்றுலா சென்று வர சிறந்த ஏற்பாடுகளை செய்து தருகிறோம். இந்த சுற்றுலாக்களுக்கு உடனடியாக பணம் செலுத்தியும், மாத தவணையில் பணம் செலுத்தியும் குறைந்த கட்டணத்தில் முன் பதிவு செய்தும் வாடிக்கையாளர்கள் சுற்றுலாப் பயணம் சென்று வரலாம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com