முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
தமிழகத்தில் வாகன சோதனை: ஒரே நாளில் 41 ஆயிரம் பேர் மீது வழக்கு
By DIN | Published On : 04th August 2019 03:12 AM | Last Updated : 04th August 2019 09:39 AM | அ+அ அ- |

தமிழகம் முழுவதும் கடந்த வெள்ளிக்கிழமை ஒரே நாளில் நடத்தப்பட்ட வாகன சோதனையில் பல்வேறு போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 41 ஆயிரம் பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
தமிழகத்தில் சாலை விபத்துகள் மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் தடுப்பதற்காக காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி ஜே.கே. திரிபாதி தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களுக்கு ஒரு உத்தரவிட்டதன்படி, கடந்த வெள்ளிக்கிழமை தமிழகம் முழுவதும் போலீஸார் முக்கியமான சாலை சந்திப்புகள், அதிகமாக விபத்துகள் நடைபெறும் இடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்கள் ஓட்டி வந்ததாக 28 ஆயிரத்து 876 பேர் மீதும், மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக 1,025 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்குகள் உள்பட பல்வேறு போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக மொத்தம் 41 ஆயிரத்து 769 பேர் மீது ஒரே நாளில் வழக்கு பதிவு செய்யப்பட்டன.