நிலைத்த வளர்ச்சி மீதான சர்வதேச மாநாடு: எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் ஏற்பாடு

நிலைத்த வளர்ச்சி மற்றும் பருவநிலை மாற்றத்தை சமாளிக்க அறிவியலை வலுப்படுத்துவது மீதான சர்வதேச மாநாடு சென்னையில் ஆகஸ்ட் 7 முதல் 9 ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெற உள்ளது.

நிலைத்த வளர்ச்சி மற்றும் பருவநிலை மாற்றத்தை சமாளிக்க அறிவியலை வலுப்படுத்துவது மீதான சர்வதேச மாநாடு சென்னையில் ஆகஸ்ட் 7 முதல் 9 ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெற உள்ளது.
 எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் தரமணியில் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
 இதுகுறித்து சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் அளித்த பேட்டி:
 இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் 30-ஆம் ஆண்டு விழாவும் கொண்டாடப்பட உள்ளது. இந்த முப்பது ஆண்டுகளில் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்குதல், பசியைப் போக்குவது, வேளாண் உற்பத்தியைப் பெருக்குவதற்கான ஆராய்ச்சிகளை நிறுவனம் மேற்கொண்டு வந்துள்ளது.
 ஆகஸ்ட் 7-ஆம் தேதி நடைபெறும் இந்த மாநாடு தொடக்க விழாவில் பங்கேற்கும் தமிழக முதல்வர், ஆராய்ச்சி நிறுவனத்தின் 2018-19-ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையை வெளியிட உள்ளார். ஆராய்ச்சி நிறுவனம் இந்த 30 ஆண்டுகளாக மேற்கொண்ட புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் வேளாண் உற்பத்தியில் அதன் தாக்கம் குறித்த அறிக்கையை துணை முதல்வர் வெளியிட உள்ளார். மாநாட்டில், பருவநிலை மாற்றம், கடற்கரைப் பகுதி மேலாண்மை, நிலைத்த நீடித்த வாழ்வாதாரம், ஊட்டச் சத்து மற்றும் உடல்நிலை பாதுகாப்பு, பல்லுயிர் பெருக்கம் ஆகிய கருத்துகள் மீதான விவாதங்களும், கருத்தரங்கங்களும் நடைபெற உள்ளன.
 மாநாட்டின் ஒரு பகுதியாக விவசாயிகள் உற்பத்தி அமைப்புகளின் (எப்.பி.ஓ.) கண்காட்சியும் நடைபெற உள்ளது. இதில் பருப்பு தானியங்கள், கோழிப் பண்ணை உற்பத்திப் பொருள்கள் ஆகியவை காட்சிப்படுத்துவதோடு, விற்பனையும் செய்யப்படும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com