விண்வெளி ஆராய்ச்சியிலும் தமிழ் நிலைத்து நிற்கும்: மயில்சாமி அண்ணாதுரை 

விண்வெளி ஆராய்ச்சியில் தமிழ் நிலைத்து நிற்க, தாய்மொழி வழியாக அறிவியல் கோட்பாடுகளைக் கற்பிக்க வேண்டும் என தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின்
விண்வெளி ஆராய்ச்சியிலும் தமிழ் நிலைத்து நிற்கும்: மயில்சாமி அண்ணாதுரை 

விண்வெளி ஆராய்ச்சியில் தமிழ் நிலைத்து நிற்க, தாய்மொழி வழியாக அறிவியல் கோட்பாடுகளைக் கற்பிக்க வேண்டும் என தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் துணைத் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.
 மத்திய அறிவியல் வளர்ச்சி நிறுவனம் (விஞ்ஞான் பிரச்சார்) தமிழில் அறிவியலை பரப்புதல் நோக்கில் "அறிவியல் பலகை' என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இதன் ஒருபகுதியாக "தமிழில் அறிவியல்' என்ற தலைப்பில் 2 நாள் கருத்தரங்கம், சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் அண்மையில் தொடங்கியது. இதனைத் தொடங்கி வைத்து மயில்சாமி அண்ணாதுரை பேசியது: இன்றைய காலகட்டத்தில் அறிவியல் வளர்ச்சி குறித்த விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அதை அவரவர் தாய்மொழி வழியாகவே மேற்கொள்வது மிகவும் சிறப்பானது.
 என்னைப் போன்று தமிழில் படித்த பலர் அறிவியலுக்கு பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளனர். எனவே, நம் தாய்மொழியைத் தாழ்த்தும் விதமாக யாரையும், தமிழில் படித்தும் முன்னேறினார் என குறிப்பிட வேண்டாம். குழந்தைகளின் சுயசிந்தனை அறிவு வளர வேண்டுமெனில் தாய்மொழியில் படிக்க வைக்க வேண்டும்.
 அறிவியல் மட்டுமே அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு முகவரியாக இருக்கும். அத்தகைய அறிவியலை நாம் தாய்மொழியில் கற்கும்போது, தமிழ் சான்றோர் அவையிலும் உயர்வாகப் பேசப்படும். விண்வெளி ஆராய்ச்சியிலும் தமிழ் நிலைத்து நிற்கும். அதற்கு அறிவியல் கோட்பாடுகள், தாய் மொழி தமிழ்வழியாக அனைவரையும் சென்றடைய வேண்டும் என்றார்.
 நிகழ்ச்சியில் விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மைய செயல் இயக்குநர் எஸ்.சவுந்தரராஜ பெருமாள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com