ஆக. 11-இல் சென்னை வருகிறார் அமித் ஷா
By DIN | Published On : 09th August 2019 04:01 AM | Last Updated : 09th August 2019 04:01 AM | அ+அ அ- |

வரும் 11-ஆம் தேதி சென்னை வரும் உள்துறை அமைச்சர் அமித் ஷா, துணை குடியரசுத் தலைவர் வெங்கைய்ய நாயுடு எழுதிய நூலினை வெளியிடுகிறார்.
இதற்கான நிகழ்ச்சி சென்னை கலைவணர் அரங்கத்தில் வரும் 11-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.
நூலினை வெளியிட்டு அமித் ஷா உரையாற்றவுள்ளார். இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், பத்திரிகையாளர் குருமூர்த்தி, வி.ஐ.டி., வேந்தர் ஜி.விசுவநாதன் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர்.
உள்துறை அமைச்சராக அமித் ஷா பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக சென்னை வரவுள்ளார்.
இந்த நூல் வெளியீட்டு விழாவுக்குப் பிறகு, அவர் தமிழக பாஜகவைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த நிகழ்வில் முக்கிய பங்கு வகித்தவர் அமித் ஷா. உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக அவர் தமிழகம் வருவது அரசியல் வட்டாரத்தில் பலத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.