க.அன்பழகனுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
By DIN | Published On : 09th August 2019 04:02 AM | Last Updated : 09th August 2019 04:02 AM | அ+அ அ- |

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனை மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை சந்தித்து நலம் விசாரித்தார்.
கீழ்ப்பாக்கம் ஆஸ்பிரான் தோட்டம் இல்லத்தில் உள்ள க.அன்பழகன் இல்லத்துக்கு வியாழக்கிழமை வந்த மு.க.ஸ்டாலின் அங்கு க.அன்பழகனை சந்தித்து நலம் விசாரித்தார்.
அப்போது, கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு மலரையும் அவரிடம் ஸ்டாலின் வழங்கினார். கட்சியின் முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, சட்டப்பேரவை உறுப்பினர் க.பொன்முடி ஆகியோர் உடனிருந்தனர்.