டிப்ளமோ நர்சிங்: 26 முதல் ஆன்லைனில் விண்ணப்பம்

செவிலியப் பட்டயப் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்ப நடைமுறைகள் வரும் 26-ஆம் தேதி தொடங்கும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.


செவிலியப் பட்டயப் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்ப நடைமுறைகள் வரும் 26-ஆம் தேதி தொடங்கும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
பிஎஸ்சி நர்சிங் படிப்புகளைத் தவிர்த்து அரசு மருத்துவ கல்லூரிகளில் 2 ஆயிரம் பட்டயப் படிப்புகள் உள்ளன. அதேபோல், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 8 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்கள் இருக்கின்றன.
அவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை மட்டும் மருத்துவக் கல்வி இயக்கக தேர்வுக் குழு நடத்துகிறது.
இந்த நிலையில், அதற்கான விண்ணப்ப விநியோகம் வரும் 26-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவம், பல் மருத்துவம், கால்நடை மருத்துவம் உள்ளிட்டவற்றைப் போலவே நிகழாண்டு முதல் துணை மருத்துவப் படிப்புகளுக்கும் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கும் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.
அதன்படி,   https://www.tnhealth.org, https://tnmedicalselection.net   ஆகிய இணையதளங்களில் செவிலியப் பட்டயப் படிப்புகளுக்கான விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செப்டம்பர்  6-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அவை பரிசீலனை செய்யப்பட்டு செப்டம்பர் 13-ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என்றும் மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com