சுடச்சுட

  


  சென்னை தாம்பரத்தை அடுத்த பெருங்களத்தூர் ஸ்ரீகிருஷ்ணா கல்வி அறக்கட்டளை நிறுவனம் 100 ஏழை மாணவ, மாணவிகளுக்கு இலவச பொறியியல் கல்வி வழங்க முன்வந்துள்ளது.
  இது குறித்து கல்வி அறக்கட்டளை தலைவர் ஆர்.விவேகானந்தன் செய்தியாளர்களிடம் கூறியது:
  சென்னை படப்பையை அடுத்த பனப்பாக்கத்தில் ஸ்ரீகிருஷ்ணா கல்வி அறக்கட்டளை சார்பில் பொறியியல் கல்லூரி நடத்தி வருகிறோம். கல்லூரியின் 20 ஆம் ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு 100 ஏழை மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கட்டணம்,விடுதிக் கட்டணம்,பேருந்துக் கட்டணமின்றி இலவசமாக பொறியியல் கல்வி வழங்க  உள்ளோம்.
  தகுதி உள்ள 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் மதிப்பெண் சான்றிதழ், ஆதார் அடையாள அட்டை  ஆகியவற்றுடன் ஸ்ரீகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, பனப்பாக்கம், படப்பை முகவரிக்கு நேரில் வந்து சேர்க்கை பெறலாம். 
  பி.இ.கணினி அறிவியல், மின்னணு கணினியியல், மின்னியல்,மின்னணுவியல், இயந்திரவியல், கட்டடவியல், பி.டெக் தகவல் தொழில்நுட்பவியல்,பேஷன் டெக்னாலஜி ஆகிய படிப்புகளில் சேர்ந்து பயன் பெறலாம். விபரங்களுக்கு 94448 64288,97101 19126 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai