மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்: இன்று தொடக்கம்

சென்னை மாவட்டத்துக்கு உள்பட்ட மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16) தொடங்க உள்ளது.


சென்னை மாவட்டத்துக்கு உள்பட்ட மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16) தொடங்க உள்ளது.
இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீதாலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 1 வயது முதல் 18 வயது வரை உள்ள செவித்திறன் குறைபாடு, பார்வைக் குறைபாடு, ஆட்டிசம் குறைபாடு, பெருமூளை வாதம் ஆகிய குறைபாடுள்ள மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீடு முகாம் 10 இடங்களில் நடைபெற உள்ளது.
வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16) தொடங்கி ஆகஸ்ட் 22-ஆம் தேதி வரை  நடைபெறும் இந்த முகாமில் காது, மூக்கு, தொண்டை மருத்துவர், மனநல மருத்துவர், கண் மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர், முடநீக்கியல் மருத்துவர் ஆகியோர் மாற்றுத் திறனாளி குழந்தைகளைப் பரிசோதித்து  அக்குழந்தைகளுக்கு தேசிய அடையாள அட்டை, உதவி உபகரணங்கள், ரயில், பேருந்து பயணச்சீட்டு சலுகை ஆகியவை பெறவும்  அறுவை சிகிச்சை செய்யவும் பரிந்துரை செய்வர். இந்த முகாமுக்கு வருவோர் மாற்றுத் திறன் குழந்தைகளின் 4 புகைப்படங்கள், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, மருத்துவச் சான்றிதழ், அடையாள அட்டை நகல் ஆகியவற்றைத் தவறாமல் கொண்டு வர வேண்டும்.
முகாம் நடைபெறும் இடங்கள்: ராயபுரத்தில் உள்ள சென்னை உருது பெண்கள் மேல்நிலைப் பள்ளி, நந்தனம் சிஐடி நகரில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் வெள்ளிக்கிழமையும் (ஆகஸ்ட் 16), கொருக்குப்பேட்டை கண்ணன் தெருவில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, அடையாறு இந்திரா நகரில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் திங்கள்கிழமையும் (ஆகஸ்ட் 19), தியாகராய நகர் பனகல் பூங்கா அருகே உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, சூளைமேடு வி.கே.பிள்ளை தெருவில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமையும் (ஆகஸ்ட் 20), பெரம்பூர் டி.வி.கே. நகரில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளி, திருவல்லிக்கேணி அருணாசலம் தெருவில் உள்ள சென்னை சமுதாயக் கல்லூரியில் புதன்கிழமையும் (ஆகஸ்ட் 21), வள்ளுவர் கோட்டம் ராமா தெருவில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, சேத்துப்பட்டு எம்சி நிக்கோலஸ் சாலையில் உள்ளமாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 22) காலை 9.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை முகாம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com