இளைஞர், முதியவரின் உடல்  உறுப்புகள் தானம்:  9 பேருக்கு மறுவாழ்வு

மூளைச் சாவு அடைந்த முதியவர் மற்றும் இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டதன்  மூலம் 9 பேர் மறுவாழ்வு பெற்றனர்.

மூளைச் சாவு அடைந்த முதியவர் மற்றும் இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டதன்  மூலம் 9 பேர் மறுவாழ்வு பெற்றனர்.
 சென்னை, புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் மேரி. சிற்றுண்டி கடை வைத்துள்ள அவருக்கு இரு மகன்கள். அவர்களில் இரண்டாவது மகனான கோகுல கிருஷ்ணன் (19) காலணி கடை ஒன்றில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், கடந்த இரு நாள்களுக்கு முன்பு சாலை விபத்தில் காயமடைந்த அவர், ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் கோகுல கிருஷ்ணன் மூளைச் சாவு அடைந்ததை உறுதிப்படுத்தினர். இதையடுத்து,  அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க உறவினர்கள் முன்வந்தனர். அதன்படி, கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள், கணையம், இதய வால்வுகள் ஆகியவை அவரிடம் இருந்து தானமாகப் பெறப்பட்டு 5 பேருக்கு பொருத்தப்பட்டன. 
இதேபோன்று, சாலை விபத்தில் காயமடைந்த கும்மிடிப்பூண்டியை அடுத்த செங்கல்சூளைமேடு பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் (62) என்பவரும் மூளைச் சாவு அடைந்தார். அவரிடம் இருந்து கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள் தானமாகப் பெறப்பட்டு  4 பேருக்கு பொருத்தப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com