தத்கல் திட்டம்: 21 ஆயிரம் விவசாய மின் இணைப்புகள்

விவசாயிகளுக்கான தத்கல் மின் திட்டத்தின் கீழ் 21,302 மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 


விவசாயிகளுக்கான தத்கல் மின் திட்டத்தின் கீழ் 21,302 மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 
தமிழகத்தின் வீடுகள், தொழிற்சாலைகள், வணிகக் கட்டங்கள் என அனைத்துக்கும் மின் வாரியம் மற்றும் பகிர்மானக் கழகம் மின்சாரத்தை விநியோகித்து வருகிறது. இதற்கான மின் விநியோகத்தை ஆங்காங்கே அமைக்கப்பட்ட பிரிவு அலுவலகங்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு சாதாரணம், சுயநிதி என இரண்டு பிரிவுகளில் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. சாதாரண பிரிவில் மின் வழித்தட செலவை மின் வாரியம் ஏற்பதுடன், மின்சாரமும் இலவசமாக விநியோகம் செய்யப்படுகிறது. சுயநிதி பிரிவில் வழித்தட செலவை விவசாயிகள் ஏற்க வேண்டும். மின்சாரம் மட்டும் இலவசமாக வழங்கப்படும். இதன்படி, 21 லட்சத்துக்கும் அதிகமான விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 
இந்த நிலையில், விவசாயிகள் பயன்பெறும் வகையில் விரைவாக மின் இணைப்பு வழங்கும் நோக்கில் தத்கல் மின் திட்டம் கடந்த 2017 ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை 21 ஆயிரம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 
இதுகுறித்து மின்வாரிய வட்டாரங்கள் கூறியது: 
தத்கல் திட்டத்தின் கீழ் 5 குதிரைத்திறன் மின்சக்தி கொண்ட மோட்டர் இணைப்புக்கு ரூ.2.50 லட்சம், 7 குதிரைத்திறன் மின் சக்தி கொண்ட மோட்டர் மின் இணைப்புக்கு ரூ.2.75 லட்சம், 10 குதிரைத்திறன் சக்தி கொண்ட மோட்டர் மின் இணைப்புக்கு ரூ.3 லட்சமும், 15 குதிரை சக்தி கொண்ட மோட்டர் மின் இணைப்புக்கு ரூ.15 லட்சமும் செலுத்த வேண்டும். இவ்வாறு இந்தத் திட்டத்தின் கீழ் கட்டணம் செலுத்தியோருக்கு 21, 302 மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன  என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com