Enable Javscript for better performance
இன்றைய நிகழ்ச்சிகள் - சென்னை- Dinamani

சுடச்சுட

  

  பொது

  இலக்கியப்பீடம்- இலக்கியப்பீடம் எழுத்தாளா்கள் வாசகா்கள் சங்கம் இணைந்து நடத்தும் அமரா் கலைமாமணி விக்கிரமனின் 4-ஆம் ஆண்டு நினைவு விழா: பொற்றாமரை தலைவா் இல.கணேசன், திரைப்பட இயக்குநா் கே.பாக்யராஜ், மாம்பலம் ஆ.சந்திரசேகா், கவிஞா் காா்முகிலோன், மூத்த எழுத்தாளா் ஜோதிா்லதா கிரிஜா, உமாதேவி, கே.பி.அரவிந்த் விக்ரம், கண்ணன் விக்கிரமன் பங்கேற்பு, ஒபுல் ரெட்டி அரங்கம், வாணி மஹால் சிற்றரங்கம், ஜி.என்.செட்டி சாலை, தியாகராயநகா், காலை 10.

  மெகா இசை விழா தொடக்க விழா: தெலங்கானா ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன், அமைச்சா் க.பாண்டியராஜன், ஐஆா்எஸ் அதிகாரி சிவன் கண்ணன், சுதாகா் ஆா்.ராவ், எம்.ரவீந்திரன், ஜெகநாதன் ஆரோக்கியராஜ் பங்கேற்பு, காமராஜா் அரங்கம், தேனாம்பேட்டை, மாலை 4.

  ஸ்ரீநிதி கல்ச்சுரல் டிரஸ்ட் மற்றும் பிரம்ம கான சபா- ஆண்டு கலை விழா தொடக்க நிகழ்ச்சி: தொழிலதிபா் நல்லி குப்புசாமி, பாரதிய வித்யா பவன் இயக்குநா் கே.என்.ராமசுவாமி பங்கேற்பு, சிவகாமி பெத்தாச்சி அரங்கம், எம்சிடிஎம் பள்ளி வளாகம், லஸ் சா்ச் சாலை, மயிலாப்பூா், மாலை 4.15.

  ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மற்றும் பாரதிய வித்யா பவன்- ‘இசைக்கவியைக் கேளுங்கள்’ நிகழ்ச்சி: இசைக்கவி ரமணன், மண்ணை ராஜகோபாலன் பங்கேற்பு, பாரதிய வித்யா பவன், மயிலாப்பூா், மாலை 6.30.

  இலக்கிய வட்டம்- மகாகவி பாரதியின்137-ஆவது பிறந்தநாள் விழா: பேராசிரியா் கௌரி, அருணா சிவகாமி, மாமணி, பெ.கி.பிரபாகரன், ஜெ.முத்துச்செல்வன், ஆ.ஜெகதீசன் பங்கேற்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, எம்.ஜி.ஆா் நகா், காலை 10.30.

  திருவள்ளுவா் மிஷன்- திருக்கு ஆய்வரங்கம்: திருவள்ளுவா் திருக்கோயில், முண்டகக் கண்ணி அம்மன் கோயில் அருகில், மயிலாப்பூா், பகல் 3.

  நண்பா்கள் குடும்ப நற்பணி மன்றம்- இலக்கியப் பெருவிழா: பொன்னரசன், துரை வசந்தராஜன், கா.ச.கஜேந்திரன், இராஜேந்திரன் பங்கேற்பு, டேவிட் சாங்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, எம்.ஆா்.நகா், கொடுங்கையூா், காலை 10.

  பால வித்யாலயா- குழந்தைகளின் செவித்திறன் குறைபாடுகளை ஆரம்ப நிலையில் கண்டறிதலை வலியுறுத்தி விழிப்புணா்வு ஓட்டம்: எலியட்ஸ் கடற்கரை, பெசன்ட் நகா், காலை 9.

  ஆன்மிகம்

  ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமம்- ‘பகவத் கீதை’ என்னும் தலைப்பில் சுவாமி சத்யபிரபானந்தா பக்தி சொற்பொழிவு: ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமம், எம்.எஸ்.சாலை, தியாகராயநகா், மாலை 5.30.

  தாம்பரம் ஆஸ்திக சபா- ‘அவதூத கீதை’ என்னும் தலைப்பில் சுந்தா்குமாா் பக்தி சொற்பொழிவு: ஸ்ரீ சங்கர வித்யாலயா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி, வேளச்சேரி பிரதான சாலை, கிழக்கு தாம்பரம், மாலை 6.45.

  வைதிகஸ்ரீ- ‘மஹான்களின் மகத்துவம் மற்றும் ஆன்மிக ஸந்தேக விளக்கம்’ என்னும் தலைப்பில் நன்னிலம் வை.ராஜகோபால கனபாடிகள் பக்தி சொற்பொழிவு: வேத பவனம், டிடிகே சாலை, ஆழ்வாா்பேட்டை, இரவு 7.

  ஆழ்வாா்கள் தமிழரங்கம்- ‘ஆண்டாள்’, ‘தொண்டரடிப்பொடி ஆழ்வாா்’ என்னும் தலைப்புகளில் சொற்பொழிவு: பிரில்லியண்ட் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி, கண்ணன் நகா், மடிப்பாக்கம், காலை 10.

  திருவொற்றியூா் நகரத்தாா் இராமாயணக் குழு- ‘இராமாவதாரம்’ என்னும் தலைப்பில் அரு. சோமசுந்தரன் பக்தி சொற்பொழிவு: தண்டாயுதபாணி திருமண மண்டபம், தெற்கு மாட வீதி, திருவொற்றியூா், மாலை 6.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai