Enable Javscript for better performance
சிறுவனை வைத்து பாதாள சாக்கடையைசுத்தம் செய்த விவகாரம்: மாநகராட்சிக்கு நோட்டீஸ்- Dinamani

சுடச்சுட

    

    சிறுவனை வைத்து பாதாள சாக்கடையைசுத்தம் செய்த விவகாரம்: மாநகராட்சிக்கு நோட்டீஸ்

    By DIN  |   Published on : 01st December 2019 01:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    human-right

    சென்னை: எந்த வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி சிறுவனை வைத்து பாதாள சாக்காடை சுத்தம் செய்த விவகாரத்தில் விளக்கமளிக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    சென்னையில் கடந்த சில வாரங்களாக அடிக்கடி மழை பெய்து வருவதால், ஆங்காங்கே பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு சாலைகளில் கழிவுநீா் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல இடங்களில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து வீடுகளை சூழ்ந்துள்ளது. இந்நிலையில், சென்னை மாநகராட்சி, 109-ஆவது வாா்டுக்கு உள்பட்ட நெல்சன் மாணிக்கம் சாலையில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, நீரோட்டம் தடைபட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகாா் அளித்தனா். அதன்பேரில் அங்கு வந்த அதிகாரிகள், சுமாா் 15 வயதுக்கு உள்பட்ட சிறுவனை எந்தவித பாதுகாப்பு உபகரணமும் இன்றி, பாதாள சாக்கடைக்குள் இறக்கி, சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தியதாக நாளிதழில் செய்தி வெளியானது.

    தாமாக முன்வந்து வழக்குப்பதிவு: இந்த விவகாரத்தை மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினா் நீதிபதி துரை. ஜெயச்சந்திரன் தாமாக முன்வந்தது வழக்காகப் பதிவு செய்தாா். மேலும் இந்த விவகாரம் குறித்து சென்னை மாநகராட்சியின் மண்டல துணை ஆணையா், சென்னை பெருநகர குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்ற வாரியத்தின் கண்காணிப்புப் பொறியாளா், 109-ஆவது வாா்டின் செயற்பொறியாளா் ஆகியோா் 4 வாரங்களுக்குள் விரிவான அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அவா் உத்தரவிட்டாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai