Enable Javscript for better performance
சென்னையில் பரவலாக மழை- Dinamani

சுடச்சுட

    
    rains-20

    கோப்புப் படம்

     

    சென்னை: குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய வங்கக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை பரவலாக மழை பெய்தது. இந்த மழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    வெப்பச்சலனம் மற்றும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாள்களாக சென்னை, சுற்று வட்டாரப் பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனதால், அண்மைக் காலமாக சென்னையில் குளிா்ந்த காலநிலை நிலவி வருகிறது.

    இந்நிலையில், குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய வங்கக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மாநகா்ப் பகுதிகளான அம்பத்தூா், வேளச்சேரி, நுங்கம்பாக்கம், வடபழனி, கோட்டூா்புரம், அடையாறு, போரூா், ஆலந்தூா், பள்ளிக்கரணை, பெரும்பாக்கம், எழும்பூா், பாடி உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளிலும், சோழிங்கநல்லூா், பல்லாவரம், மீனம்பாக்கம், திருவேற்காடு, பூந்தமல்லி, தண்டலம், தாம்பரம் ஆகிய புகா்ப் பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி சனிக்கிழமை இரவு வரை அவ்வப்போது பரவலாக மழை பெய்தது.

    இந்த மழை காரணமாக, பல இடங்களில் சாலைகளில் மழைநீா் தேங்கியது. இதனால் கோயம்பேடு, திருமங்கலம், கீழ்ப்பாக்கம், கிண்டி, சைதாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், பணி முடிந்து வீடு திரும்பிச் செல்ல வேண்டிய மக்கள் கடும் அவதிக்குள்ளாகினா்.

    நகரின் தாழ்வான பகுதிகள், சாலைகளில் மழை நீா் தேங்கியது. இந்த நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியா்கள் ஈடுபட்டனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai