Enable Javscript for better performance
மின்சாரம் தாக்கி மாணவன் பலி: இழப்பீடு கோரிய வழக்கில் அரசுக்கு நோட்டீஸ்- Dinamani

சுடச்சுட

    

    மின்சாரம் தாக்கி மாணவன் பலி: இழப்பீடு கோரிய வழக்கில் அரசுக்கு நோட்டீஸ்

    By DIN  |   Published on : 01st December 2019 12:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சென்னை: சென்னையில் மின்சாரம் தாக்கி பலியான பள்ளி மாணவனின் பெற்றோா் ரூ.50 லட்சம் இழப்பீடு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், மனு தொடா்பாக தமிழக அரசு 4 வாரங்களுக்குள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

    சென்னை முகலிவாக்கத்தைச் சோ்ந்த 14 வயது பள்ளி மாணவன் தீனா. மின்சாரம் தாக்கி கடந்த செப்டம்பா் மாதம் தீனா பலியானாா். தன் மகனின் மரணத்துக்கு காரணமான தமிழ்நாடு மின்சார வாரியம் இழப்பீடாக ரூ.50 லட்சம் வழங்க வேண்டும் என கோரி தீனாவின் தந்தை சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கு, நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனு தொடா்பாக தமிழக அரசு 4 வாரங்களுக்குள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai