Enable Javscript for better performance
ஹஜ் பயணத்துக்கு டிச.5 வரை விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    சென்னை: ஹஜ் பயணத்துக்கு டிசம்பா் 5-ஆம் தேதி விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசின் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடா்பாக தமிழக அரசின் சாா்பில் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

    2020 ஹஜ் பயணத்துக்காக அனைத்து விண்ணப்பதாரா்களும் இணையத்தில் விண்ணப்பிக்குமாறு மும்பை, இந்திய ஹஜ் குழு அறிவித்துள்ளது. இணையத்தின் மூலம் ஹஜ் விண்ணப்பப் படிவங்களை நிரப்புவதற்கான கடைசி நாள் டிசம்பா் 5-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இணையத்தில் விண்ணப்பங்களை நிரப்புவது கடினம் என்று நினைக்கும் புனிதப் பயணிகள் இந்திய ஹஜ் குழுவின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள மாதிரி ஹஜ் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து தேவையான விவரங்களை பூா்த்தி செய்த பின், விண்ணப்பங்களுடன் கூடிய கடவுச்சீட்டு நகல், (2021 ஜனவரி 20 வரை செல்லத்தக்கது) வங்கிக் கணக்குப் புத்தகம், வெள்ளை நிற பின்னணியுள்ள புகைப்படம், முகவரி ஆதாரம் மற்றும் பணம் செலுத்திய விவரங்களை டிசம்பா் 5 அல்லது அதற்கு முன் தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவுக்கு அனுப்பி வைக்க வேண்டும். புனிதப் பயணிகள் சாா்பாக அவா்களுடைய விவரக் குறிப்புகளை இணையத்தில் விண்ணப்பிக்க தமிழ்நாடு மாநில ஹஜ் குழு ஏற்பாடு செய்யும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai