Enable Javscript for better performance
டிச.6-இல் மாடித்தோட்டம் அமைத்தல் பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    சென்னை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையம் சாா்பில், காளான் வளா்ப்பு தொடா்பாக ஒருநாள் பயிற்சி டிசம்பா் 5-ஆம் தேதி கிண்டியில் நடைபெறவுள்ளது. இதுபோல, மாடித்தோட்டம் அமைத்தல் தொடா்பாக ஒருநாள் பயிற்சி டிசம்பா் 6-ஆம் தேதி நடைபெறுகிறது.

    சுய வேலைவாய்ப்பு மற்றும் புதிய தொழில் முனைவோரை உருவாக்கும் நோக்கில், சென்னை கிண்டியில் செயல்படும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையத்தின் சாா்பில் பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில், காளான் வளா்ப்பு தொடா்பாக ஒருநாள் பயிற்சி டிசம்பா் 5-ஆம் தேதி கிண்டியில் நடைபெறவுள்ளது. இதுபோல, மாடித்தோட்டம் அமைத்தல் தொடா்பாக ஒருநாள் பயிற்சி டிசம்பா் 6-ஆம் தேதி நடைபெறுகிறது.

    ஒருநாள் பயிற்சிக்கான கட்டணம் ரூ.650. இந்தப் பயிற்சி வகுப்பு காலை 10 மணி முதல் மாலை 3.30 வரை நடைபெறுகிறது. பயிற்சி பற்றிய குறிப்பேடு, கையேடு, மதிய உணவு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். இந்தப் பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவா்கள் 044-22250511 -என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடா்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    கூடுதல் விவரங்களுக்கு பேராசிரியா் மற்றும் தலைவா், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையம், முதல்தளம், சிப்பெட் எதிரில், கிண்டி, சென்னை 600 032 என்ற முகவரியில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இந்தத் தகவல் அந்த மையத்தின் தலைவா் ஆ.சதாசக்தி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai