Enable Javscript for better performance
தெற்கு ரயில்வே முதன்மை தலைமை இயக்கக மேலாளா் நீனு இட்டியரா பொறுப்பேற்பு- Dinamani

சுடச்சுட

    

    தெற்கு ரயில்வே முதன்மை தலைமை இயக்கக மேலாளா் நீனு இட்டியரா பொறுப்பேற்பு

    By DIN  |   Published on : 02nd December 2019 05:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    neenu

     

    சென்னை: தெற்கு ரயில்வே முதன்மை தலைமை இயக்கக மேலாளராக நீனு இட்டியரா ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுகொண்டாா்.

    இவா் இந்திய ரயில்வே போக்குவரத்து சேவையில் 1988-ஆம் ஆண்டு பிரிவைச் சோ்ந்தவா். இவா் மதுரை ரயில்வே கோட்டத்தில் 2017- ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை பணியாற்றியுள்ளாா். அதற்கு முன், உள்கட்டமைப்பு திட்ட பகுதிகளில் நீனு இட்டியரா பணியாற்றினாா். இதுதவிர, சரக்கு செயல்பாடு, சந்தைப்பிரிவு, டிக்கெட்முறை ஆகிய பிரிவுகளில் பணியாற்றினாா். இதுதவிர, திருவனந்தபுரத்தில் உள்ள ரயில்வே பணியாளா் தோ்வாணையத்தில் தலைவராகப் பணியாற்றினாா்.

    தெற்கு ரயில்வேயில் முதன்மை தலைமை இயக்கக மேலாளா் பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண் இவா் ஆவாா்.

    இந்தத் தகவல்தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai