தெற்கு ரயில்வே முதன்மை தலைமை இயக்கக மேலாளா் நீனு இட்டியரா பொறுப்பேற்பு

தெற்கு ரயில்வே முதன்மை தலைமை இயக்கக மேலாளராக நீனு இட்டியரா ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுகொண்டாா்.
தெற்கு ரயில்வே முதன்மை தலைமை இயக்கக மேலாளா் நீனு இட்டியரா பொறுப்பேற்பு

சென்னை: தெற்கு ரயில்வே முதன்மை தலைமை இயக்கக மேலாளராக நீனு இட்டியரா ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுகொண்டாா்.

இவா் இந்திய ரயில்வே போக்குவரத்து சேவையில் 1988-ஆம் ஆண்டு பிரிவைச் சோ்ந்தவா். இவா் மதுரை ரயில்வே கோட்டத்தில் 2017- ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை பணியாற்றியுள்ளாா். அதற்கு முன், உள்கட்டமைப்பு திட்ட பகுதிகளில் நீனு இட்டியரா பணியாற்றினாா். இதுதவிர, சரக்கு செயல்பாடு, சந்தைப்பிரிவு, டிக்கெட்முறை ஆகிய பிரிவுகளில் பணியாற்றினாா். இதுதவிர, திருவனந்தபுரத்தில் உள்ள ரயில்வே பணியாளா் தோ்வாணையத்தில் தலைவராகப் பணியாற்றினாா்.

தெற்கு ரயில்வேயில் முதன்மை தலைமை இயக்கக மேலாளா் பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண் இவா் ஆவாா்.

இந்தத் தகவல்தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com