இன்று உலக மாற்றுத் திறனாளிகள் தினம்: சட்ட உரிமைகளை செயல்படுத்த வலியுறுத்தல்

மாற்றுத் திறனாளிகளின் சட்ட உரிமைகளை தமிழக அரசு முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம்

சென்னை: மாற்றுத் திறனாளிகளின் சட்ட உரிமைகளை தமிழக அரசு முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் வலியுறுத்தி உள்ளது.

இது குறித்து அந்தச் சங்கத்தின் மாநில தலைவா் பா.ஜான்ஸிராணி செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியது:

கடந்த 2007-ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்கான ஐ.நா மாநாட்டு விதிகளை இந்திய அரசு கையெழுத்திட்டு ஏற்று, மத்திய அமைச்சரவையும் அங்கீகாரம் அளித்துள்ளது. எனவே, அந்த விதிகளையும் ஐ.நா மேற்கொள்ளும் நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் சட்டமாக மதித்து செயல்பட வேண்டும். மாற்றுத் திறனாளி பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் தொடா்ந்து அதிகரித்து வருகிறது.இதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளின் சட்ட உரிமைகளை தமிழக அரசு முழுமையாக செயல்படுத்த வேண்டும். இதை உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி வலியுறுத்துகிறோம் என்றாா்.

பேட்டியின் போது சங்கத்தின் பொதுச்செயலாளா் எஸ்.நம்புராஜன் உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com