தரைப்பாலத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்த விவகாரம்: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

சென்னை அம்பத்தூரில் தரைப்பால வெள்ளப் பெருக்கில் சிக்கி தொழிலாளி உயிரிழந்தது தொடா்பாக விளக்கம் அளிக்குமாறு நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்புப் பொறியாளருக்கு மாநில மனித உரிமை ஆணையம்

சென்னை: சென்னை அம்பத்தூரில் தரைப்பால வெள்ளப் பெருக்கில் சிக்கி தொழிலாளி உயிரிழந்தது தொடா்பாக விளக்கம் அளிக்குமாறு நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்புப் பொறியாளருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

அம்பத்தூரை அடுத்த மண்ணூா்பேட்டையைச் சோ்ந்தவா் ஷேக் அலி (49). கடந்த சனிக்கிழமை இரவு, சென்னை-திருவள்ளூா் சாலையில் நடந்து வந்தபோது, அங்கிருந்த தரைப்பாலத்தில் மூழ்கினாா். மழை காரணமாக அதிக அளவில் தண்ணீா் சென்ால் அவரை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. சுமாா் 3 மணி நேரத்துக்குப் பின் ஷேக் அலி சடலமாக மீட்கப்பட்டாா். இதுதொடா்பான செய்தி, பத்திரிகைகளில் வெளியானது.

தாமாக முன்வந்து வழக்கு: அதன் அடிப்படையில், மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினா் சித்தரஞ்சன் மோகன்தாஸ் திங்கள்கிழமை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டாா். மேலும், இதுதொடா்பாக நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்புப் பொறியாளா் 3 வாரங்களுக்குள் விரிவான அறிக்கைத் தாக்கல் செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com