காலமானாா் எழுத்தாளா் முருகையா
By DIN | Published on : 04th December 2019 10:35 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

சென்னை: எழுத்தாளரும், ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரியுமான சுடா் முருகையா (72) உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அண்ணாநகரில் உள்ள தனது இல்லத்தில் திங்கள்கிழமை காலமானாா்.
சுடா் முருகையா சென்னை காவல் துறையில் உதவி ஆணையராக பணியாற்றி ஓய்வு பெற்றவா். கவிதை, கட்டுரை, ஹைக்கூ ஆகிய வடிவங்களில் 30 நூல்கள் எழுதியுள்ளாா்.
இவா் எழுதிய ‘வன்முறையில் நோ்வும், தீா்வும்’, நீ + நான் = புகழ் ஆகிய இரண்டு நூல்களுக்கு தமிழக அரசின் விருது கிடைத்துள்ளது. தில்லியில் டாக்டா் அம்பேத்கா் தேசிய விருது பெற்றவா். தமிழ் இலக்கிய அமைப்புகள், காவல் துறை நலச் சங்கம் ஆகியவற்றில் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளாா். இவருக்கு மனைவி ராணி, இரு மகன்கள் உள்ளனா்.
சுடா் முருகையாவின் இறுதிச் சடங்குகள் சென்னை கண்ணம்மாபேட்டை மின் மயானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தொடா்புக்கு: 99400 60707