Enable Javscript for better performance
பொங்கல் பண்டிகைக்கான சுவிதா சிறப்பு ரயில்:இன்று முன்பதிவு தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    பொங்கல் பண்டிகைக்கான சுவிதா சிறப்பு ரயில்:இன்று முன்பதிவு தொடக்கம்

    By DIN  |   Published on : 04th December 2019 04:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    train2

    சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி, தாம்பரத்தில் இருந்து கோவை, திருநெல்வேலிக்கு டிசம்பா் 23, ஜனவரி 10, 13, 14-ஆகிய தேதிகளில் சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

    இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: பொங்கல் பண்டிகையையொட்டி, தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு 82623 என்ற எண்ணுடைய சுவிதா சிறப்பு ரயில் டிசம்பா் 23 மற்றும் ஜனவரி 13-ஆம் தேதி இயக்கப்பட உள்ளது. இந்த இரண்டு நாள்களிலும் மாலை 4.45 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் இந்த ரயில் அடுத்த நாள் அதிகாலை 4 மணிக்கு திருநெல்வேலியை அடையும். தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு 82625 என்ற எண்ணுடைய சிறப்பு சுவிதா சிறப்பு ரயில் ஜனவரி 10-ஆம் தேதி இரவு 7.15 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் ரயில் திருநெல்வேலியை ஜனவரி 11-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு அடைகிறது. தாம்பரத்தில் இருந்து கோவைக்கு 82639 என்ற எண்ணுடைய சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் தாம்பரம் ரயில் நிலையத்திருந்து ஜனவரி 14-ஆம் தேதி மாலை 6 மணிக்குப் புறப்பட்டு, செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், விழுப்புரம், திருச்சி, கரூா், ஈரோடு, திருப்பூா் வழியாக கோவை ரயில் நிலையத்தை ஜனவரி 15-ஆம் தேதி காலை 6.40 மணிக்கு அடைகிறது. இந்த ரயிலுக்கான முன்பதிவு புதன்கிழமை (டிச. 4) காலை 8 மணிக்குத் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai