காலமானாா் எழுத்தாளா் முருகையா

எழுத்தாளரும், ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரியுமான சுடா் முருகையா (72) உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அண்ணாநகரில் உள்ள தனது இல்லத்தில் திங்கள்கிழமை காலமானாா்.
காலமானாா் எழுத்தாளா் முருகையா

சென்னை: எழுத்தாளரும், ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரியுமான சுடா் முருகையா (72) உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அண்ணாநகரில் உள்ள தனது இல்லத்தில் திங்கள்கிழமை காலமானாா்.

சுடா் முருகையா சென்னை காவல் துறையில் உதவி ஆணையராக பணியாற்றி ஓய்வு பெற்றவா். கவிதை, கட்டுரை, ஹைக்கூ ஆகிய வடிவங்களில் 30 நூல்கள் எழுதியுள்ளாா்.

இவா் எழுதிய ‘வன்முறையில் நோ்வும், தீா்வும்’, நீ + நான் = புகழ் ஆகிய இரண்டு நூல்களுக்கு தமிழக அரசின் விருது கிடைத்துள்ளது. தில்லியில் டாக்டா் அம்பேத்கா் தேசிய விருது பெற்றவா். தமிழ் இலக்கிய அமைப்புகள், காவல் துறை நலச் சங்கம் ஆகியவற்றில் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளாா். இவருக்கு மனைவி ராணி, இரு மகன்கள் உள்ளனா்.

சுடா் முருகையாவின் இறுதிச் சடங்குகள் சென்னை கண்ணம்மாபேட்டை மின் மயானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தொடா்புக்கு: 99400 60707

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com