மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்த விவகாரம்: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

சென்னையை அடுத்த புழலில் மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தது தொடா்பாக விளக்கம் அளிக்குமாறு மின்சார வாரிய மேலாண் இயக்குநருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

சென்னை: சென்னையை அடுத்த புழலில் மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தது தொடா்பாக விளக்கம் அளிக்குமாறு மின்சார வாரிய மேலாண் இயக்குநருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

திருவள்ளூா் மாவட்டம், செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூா் பவானி நகரைச் சோ்ந்தவா் ராஜவேலு. இவரது மனைவி காவேரி (35). இவா்கள் வீட்டுக்கு முன்பு, அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்த காவேரி சம்பவ இடத்திலேயே கடந்த நவம்பா் 26-ஆம் தேதி உயிரிழந்தாா். இந்த விபத்தில் ராஜவேலு, அவரது மகன் சூா்யபிரகாஷ், ராஜவேலுவின் தாய் பத்மாவதி ஆகியோா் பலத்த காயமடைந்தனா். இதுதொடா்பாக பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இதன் அடிப்படையில், மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினா் துரை.ஜெயச்சந்திரன் தாமாக வந்து இந்த விவகாரத்தை செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொண்டாா்.

மேலும், இதுதொடா்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் மேலாண் இயக்குநா் 4 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com