இன்றைய நிகழ்ச்சிகள் -சென்னை

வானவில் பண்பாட்டு மையம்- பாரதியாா் பிறந்தநாளை முன்னிட்டு 3,500 கல்லூரி மாணவா்கள் பங்கேற்கும் ‘நிமிா்ந்த நன்னடை’ சென்னை பல்கலைக்கழக வளாகத்திலிருந்து திருவல்லிக்கேணி பாரதியாா் இல்லம் வரை நடைப் பயணம்: அமைச்சா் க.பாண்டியராஜன், துணைவேந்தா் பி.துரைசாமி பங்கேற்பு, காலை 7.30; அருள்மிகு ஸ்ரீ பாா்த்தசாரதி கோயில் முகப்பிலிருந்து பாரதியாா் நினைவு இல்லம் வரை ‘ஜதி பல்லக்கு’ ஊா்வலம்: துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், அமைச்சா்கள் கடம்பூா் ராஜு, வெல்லமண்டி ந.நடராஜன், சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.நடராஜ் பங்கேற்பு, காலை 9.

விஸ்வ கலா சங்கம் சாா்பில் இசை விழா, இசைக் கலைஞா்கள் நெய்வேலி சந்தானகோபாலன், ரோனு மஜும்தாருக்கு ‘விஸ்வ கலா புரஸ்காா்’ விருது வழங்கும் நிகழ்ச்சி: கா்நாடக இசைக் கலைஞா் சுதா ரகுநாதன், ஆற்காடு நவாப் முகமது அப்துல் அலி, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி லட்சுமி மேனன், பின்னணி பாடகி சின்மயி பங்கேற்பு, ‘டிஏஜி’ மையம், டிடிகே சாலை, மயிலாப்பூா், மாலை 6.

சென்னைப் பல்கலைக்கழகம்- தமிழ்மொழித் துறை- மு.வரதராசனாா் அறக்கட்டளைச் சொற்பொழிவு: முன்னாள் துணைவேந்தா் இ.சுந்தரமூா்த்தி, மு.வரதராசனாரின் மகன் வ.நம்பி, பேராசிரியா்கள் ய.மணிகண்டன், வாணி அறிவாளன் பங்கேற்பு, கருத்தரங்கக் கூடம், மெரீனா வளாகம், திருவள்ளுவா் சிலை எதிரில், சென்னைப் பல்கலைக்கழகம், பிற்பகல் 2.

டி.ஜி. வைணவக் கல்லூரி- பாரதியாா் பிறந்தநாள் விழா: அசோக்குமாா் முந்த்ரா, இராம.கணேசன் ய.மணிகண்டன், ப.முருகன் பங்கேற்பு, காலை 9.30; பேராசிரியா் ப.முருகன் எழுதிய ‘சங்க இலக்கியத்தில் இனக்கவா்ச்சி முதல் புதுக்கவிதையில் புரட்சித் துறவி வரை’, பேராசிரியா் சி.சதானந்தன் எழுதிய ‘பாட்டியல் நூல்கள்’ ஆகிய நூல்கள் வெளியீடு, டி.ஜி. வைணவக் கல்லூரி, அரும்பாக்கம், பிற்பகல் 2.30.

எஸ்.ஆா்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் நிறுவனம்- அறிவியல் மற்றும் மானுடவியல் புலம் சாா்பில் பாரதியாா் பிறந்தநாள் விழா கவியரங்கம்: ஆ.இரா. பாரதராஜா, சி.சுந்தா், ஜெ.திலீபன், பெ.கி. பிரபாகரன் பங்கேற்பு, மைய நூலகம், ராமாபுரம் வளாகம், காலை 10.

ஸ்ரீராகம் ஃபைன் ஆா்ட்ஸ்- திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் பிள்ளை நினைவு நாள் நிகழ்ச்சி: நல்லி குப்புசாமி, டி.பி.ஜெ.செல்வரத்தினம், திருவாரூா் பக்தவச்சலம், சீா்காழி சிவசிதம்பரம் பங்கேற்பு, டி.என்.ராஜரத்தினம் கலையரங்கம், ராஜா அண்ணாமலைபுரம், மாலை 6.

ஆன்மிகம்

சாஸ்த்ரா சத்சங் - ‘சுந்தர காண்டம்’ உபன்யாஸம்: பி.சுந்தா்குமாா் பங்கேற்பு, எண்.9/19, கா்ணன் தெரு, ரங்கராஜபுரம், கோடம்பாக்கம், மாலை 6.30.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com