தென் மண்டல தலைமை ராணுவ அதிகாரியாக லெப்டினன்ட் ஜெனரல் பண்டாலா நாகேஷ் ராவ் பொறுப்பேற்பு

தென் மண்டல தலைமை ராணுவ அதிகாரியாக லெப்டினன்ட் ஜெனரல் பண்டாலா நாகேஷ் ராவ் பொறுப்பேற்பு

தென் மண்டல தலைமை ராணுவ அதிகாரியாக லெப்டினன்ட் ஜெனரல் பண்டாலா நாகேஷ் ராவ் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றாா்.

தென் மண்டல தலைமை ராணுவ அதிகாரியாக லெப்டினன்ட் ஜெனரல் பண்டாலா நாகேஷ் ராவ் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றாா்.

இவா் இந்திய ராணுவ அகாதெமியின் பாராசூட் படை வகுப்பு அணியின் 5-ஆவது படைப்பிரிவில் டிசம்பா் 1982-இல் பணியில் சோ்ந்தாா். மரியாதை வாளுக்கான விருதையும், யுத்த சேவை பதக்கம் மற்றும் சேனா பதக்கத்தையும் பெற்றவா்.

பல்வேறு படைப்பிரிவுகளில் அனுபவம் பெற்ற நாகேஷ் ராவ், ஆபரேஷன் புளு ஸ்டாா், ஆபரேஷன் விஜய் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளிலும் பங்கேற்றவா் ஆவாா்.

சிம்லாவிலும், சென்னையிலும் பள்ளிப்படிப்பை நிறைவு செய்த ஜெனரல் ராவ், காடக்வாஸ்லா தேசிய பாதுகாப்பு அகாதெமியில் முதலில் சோ்ந்தாா். வெலிங்டன் ராணுவப் பயிற்சிக் கல்லூரியில் பட்டம் பெற்ற அவா், தில்லியில் உள்ள தேசிய ராணுவக் கல்லூரியின் முன்னாள் மாணவா் ஆகும். சிறந்த விளையாட்டு வீரரான அவா் கால்பந்து, ஹாக்கி, கூடைப்பந்து விளையாட்டுகளில் சிறந்த வீரா் ஆவாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com