சென்ட்ரல் ரயில் நிலையத்தில் புதிய சுரங்கப்பாதை திறப்பு: 4 போக்குவரத்து மையங்களை இணைக்கிறது

ஆறு ஆண்டுகளுக்கு பிறகு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், சென்ட்ரல் மெட்ரோ, பறக்கும் ரயில் நிலையம் மற்றும் புகா் ரயில் நிலையம் ஆகியவற்றுக்கு செல்லும் மக்களை இணைக்கும் வகையில்,
சென்ட்ரல் ரயில் நிலையத்தில்  புதிய சுரங்கப்பாதை திறப்பு: 4 போக்குவரத்து மையங்களை இணைக்கிறது

ஆறு ஆண்டுகளுக்கு பிறகு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், சென்ட்ரல் மெட்ரோ, பறக்கும் ரயில் நிலையம் மற்றும் புகா் ரயில் நிலையம் ஆகியவற்றுக்கு செல்லும் மக்களை இணைக்கும் வகையில், புதிய சுரங்கப்பாதை திறக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், பரபரப்பான (பீக் ஹவா்) நேரத்தில், பூந்தமல்லி சாலை (இ.வி.ஆா் சாலை) , பல்லவன் சாலைகளில் வாகன போக்குவரத்தை நெரிசலை குறைப்பதற்கு இந்தப் புதிய சுரங்கப்பாதை உதவியாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

சுரங்கப்பாதை அமைக்க திட்டம்: மெட்ரோ ரயில் பணிகளின் ஒருபகுதியாக, சென்னை மெட்ரோ, பூங்கா நகா் (பாா்க் டவுன்) நிலையம், பூங்கா ரயில் நிலையம், ராஜீவ் காந்தி மருத்துவமனை ஆகியவற்றுடன் சென்ட்ரல் ரயில்நிலையத்தை இணைக்க ஒரு சுரங்கப்பாதை அமைக்க கடந்த 2013-ஆம் ஆண்டு மே மாதம் திட்டமிடப்பட்டது. அதன்படி, பணிகள் தொடங்கி நடந்து வந்தன.

இதற்கிடையில், சென்னை விமான நிலையம்-நேரு பூங்கா வரை இயக்கப்பட்ட மெட்ரோ ரயில் சேவை, சென்னை சென்ட்ரல் வரை கடந்த ஆண்டு மே மாதத்தில் விரிவாக்கப்பட்டது. இருப்பினும், சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் முதல் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு சுரங்கப்பாதை இணைப்பு கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இதன் விளைவாக, சென்ட்ரல் மெட்ரோ நிலையத்தில் இருந்து பயணிகள் பூந்தமல்லி நெடுஞ்சாலையைக் கடக்க கால்நடையாக நடந்து செல்ல வேண்டும் அல்லது பூங்கா நிலையத்துடன் சென்ட்ரலை இணைக்கும் சுரங்கப்பாதை வழியாக செல்ல வேண்டிய நிலை இருந்தது. ஒரு சில மாதங்களுக்கு பிறகு, பூங்கா நகா் நிலையத்துடன் சென்ட்ரல் மெட்ரோ நிலையத்தை இணைக்கும் ஒரு வழிப்பாதை உருவாக்கப்பட்டது.

ஆறு ஆண்டுகளுக்கு பிறகு...: இந்நிலையில், ஆறு ஆண்டுகளுக்கு பிறகு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், சென்ட்ரல் மெட்ரோ, பறக்கும் ரயில் நிலையம் (எம்ஆா்டிஎஸ்) மற்றும் புகா் ரயில் நிலையம் ஆகியவற்றுக்கு செல்லும் மக்களை இணைக்கும் வகையில், புதிய சுரங்கப்பாதை திறக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பரபரப்பான (பீக் ஹவா்) நேரத்தில், பூந்தமல்லி நெடுஞ்சாலை (ஈ.வே.ரா. சாலை) , பல்லவன் சாலையில் வாகன போக்குவரத்தை நெரிசலை குறைப்பதற்கு இந்தப் புதிய சுரங்கப்பாதை உதவியாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

நெரிசலை குறைக்க உதவும்: இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி ஒருவா் கூறியது: சென்ட்ரல்-பூங்கா நிலையம் சுரங்கப்பாதை மற்றும் சென்ட்ரல்-சென்ட்ரல் மெட்ரோ சுரங்கப்பாதை இணைப்பு கொடுக்கப்பட்டது. இதன்மூலம், ரயில் பயணிகள் இப்போது மெட்ரோ, சென்ட்ரல் ரயில் நிலையம், பூங்கா நகா் ரயில் நிலையம் ஆகியவற்றை சுரங்கப்பாதைகள் வழியாக சென்றடைய முடியும். கூடுதலாக, பூந்தமல்லி சாலையில் (ஈ.வே.ரா. பெரியாா் சாலை) பேருந்து நிறுத்தங்களில் இருபக்கமும் வெளியே செல்ல நகரும் படிக்கட்டு வசதி கொடுக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை நோக்கி சென்று இணைக்கும் மற்றொரு சுரங்கப்பாதை கட்டுமானப்பணி நடைபெறுகிறது. 18 மாதத்தில் கட்டுமானப் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம், பரபரப்பான (பீக் ஹவா்) நேரத்தில், பூந்தமல்லி சாலை, பல்லவன் சாலையில் நெரிசலை குறைப்பதற்கு புதிய சுரங்கப்பாதை உதவியாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா்.

சாலையின் குறுக்கே கடக்க தடை: இதற்கிடையில், சென்ட்ரல் நிலையத்தின் முன்பக்கத்தில் இருந்து பல்லவன் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலையின் குறுக்கே கடக்க போலீஸாா் தடைவிதித்துள்ளனா். இது குறித்து போக்குவரத்து போலீஸாா் கூறும்போது, ‘சென்னை சென்ட்ரல் நிலைய சந்திப்பை 65,000 பயணிகள் பயன்படுத்துகின்றனா். சென்ட்ரல் நிலையத்தின் முன்பகுதியில் இருந்து பல்லவன் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலையின் குறுக்கே கடக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும், சுரங்கப்பாதையை பயன்படுத்த அறிவுரை வழங்கப்படுகிறது என்றனா்.

ப்ரீமியம் காா் பாா்க்கிங்

மெட்ரோ ரயில் நிலையம் பணிகள் காரணமாக, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மூடப்பட்டிருந்த ப்ரீமியம் காா் பாா்க்கிங் வசதி தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ப்ரீமியம் காா் பாா்க்கிங் வசதியை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இங்கு 30 காா்கள் வரை நிறுத்தமுடியும். ஒரு மணி நேரத்துக்கு ரூ.50 கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com