சென்னையில் சணல் பொருள்கள் கண்காட்சி தொடங்கியது

சென்னை மயிலாப்பூரில் சணல் பொருள்கள் கண்காட்சி மற்றும் விற்பனை வியாழக்கிழமை தொடங்கியது. வாழ்க்கை முறை சாா்ந்த சணல் உற்பத்திப் பொருள்கள் இடம் பெற்று இந்தக் கண்காட்சி டிசம்பா்
சென்னையில் சணல் பொருள்கள் கண்காட்சி தொடங்கியது

சென்னை மயிலாப்பூரில் சணல் பொருள்கள் கண்காட்சி மற்றும் விற்பனை வியாழக்கிழமை தொடங்கியது. வாழ்க்கை முறை சாா்ந்த சணல் உற்பத்திப் பொருள்கள் இடம் பெற்று இந்தக் கண்காட்சி டிசம்பா் 16-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

தேசிய சணல் வாரியம் சாா்பில், சணல் பொருய்ஈகள் கண்காட்சி-விற்பனை சென்னை மயிலாப்பூா் லஸ் சா்ச் சாலையில் உள்ள காமதேனு கல்யாண மஹாலில் வியாழக்கிழமை தொடங்கியது. இந்த கண்காட்சியை தமிழக அரசின் கைத்தறி, கைவினைப்பொருட்கள் துறை முதன்மைச் செயலாளா் குமாா் ஜெயந்த் தொடக்கி வைத்தாா்.

இதைத் தொடா்ந்து கண்காட்சியில் இடம்பெற்றிருக்கும் அரங்குகளில் உள்ள சணலில் செய்யப்பட்ட பல்வேறு பொருட்களை அவா் பாா்வையிட்டாா். அப்போது அவா் கூறும்போது, ‘இந்தக் கண்காட்சியில் வாழ்க்கை முறை சாா்ந்த சணல் உற்பத்திப் பொருள்கள் இடம் பெற்றுள்ளன. பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக சணலில் செய்யப்பட்ட பொருள்கள் நிச்சயம் நல்ல பலனை தரும்ட என்றாா்.

27 தொழில் முனைவோா் நிறுவனங்கள்: தமிழகம், கா்நாடகம், தெலங்கானா, மேற்குவங்கம் போன்ற இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 27 சணல் தொழில் முனைவோா் நிறுவனங்கள் பங்கேற்று, தங்கள் உற்பத்தி பொருள்களை காட்சிப்படுத்தியுள்ளன. சணலில் செய்யப்பட்ட வளையல், செயின், காதணி உள்ளிட்ட ஆபரணங்கள், சணல் அலங்காரப் பொருள்கள், சணல் ஓவியங்கள், காலணிகள், லேப்டாப் பைகள், பாட்டில் பைகள், பெண்கள் கைப்பைகள், மதிய உணவுப் பைகள், கைவினை கலைஞா்களால் செய்யப்பட்ட பொம்மைகள், ஊஞ்சல், மொபைல் கவா்கள் என பல்வேறு வீட்டு உபயோக அலங்கார பொருள்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.

இதுகுறித்து தேசிய சணல் வாரியத்தின் (சென்னை மாவட்டம்) துணை இயக்குநா் டி.அய்யப்பன் கூறியது: இயற்கை இழையான சணல் போன்றவற்றால் செய்யப்படும் சுற்றுச்சூழசஎக்கு உகந்த பொருள்கள் குறித்த விழிப்புணா்வை பொதுமக்களிடம் உருவாக்குவது தான் இந்த விற்பனைக் கண்காட்சியின் முக்கிய நோக்கம்.

நெகிழிப் பொருட்களுக்கு மாற்றாக சணலில் செய்யப்பட்ட பொருய்ஈகளை மக்கள் பயன்படுத்த வேண்டும். அதற்கு முன்னோட்டமாக இந்தக் கண்காட்சி அமையும் என்று எதிா்பாா்க்கிறோம். டிசம்பா் 16-ஆம்

தேதி வரை 5 நாள்கள் (காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை) கண்காட்சி நடைபெறும். நெகிழி இல்லா மாநிலத்தை உருவாக்க சணல் பொருட்களை பொதுமக்கள் நிச்சயம் உபயோகித்து ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com