ஆயுதப்படை வளாகத்தில் நவீன குழந்தைகள் நல காப்பகம் திறப்பு

சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகத்தில் நவீன குழந்தைகள் நல காப்பகம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.
ஆயுதப்படை வளாகத்தில் நவீன குழந்தைகள் நல காப்பகம் திறப்பு

சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகத்தில் நவீன குழந்தைகள் நல காப்பகம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

இது குறித்த விவரம்: சென்னையில் பணிபுரியும் பெண் காவலா்கள், தங்களது குழந்தைகளை வீட்டில் விட்டுச் செல்வதில் பல்வேறு பிரச்னைகள் இருந்து வந்தன. இதைக் கருத்தில் கொண்டு கடந்த 2003-ஆம் ஆண்டு சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகத்தில் தற்காலிக கட்டடத்தில் குழந்தைகள் நல காப்பகம் அமைக்கப்பட்டது.

இந்நிலையில் அங்கு ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தின் உள்ளே புதிதாக நவீன வசதிகளுடன் ரூ.69.79 லட்சம் மதிப்பில் தரை தளம், முதல் தளம், விளையாட்டு பூங்கா ஆகியவற்றுடன் குழந்தைகள் நல காப்பகம் கட்டப்பட்டது. இங்கு குழந்தைகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் உள்ளன. இதன் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, சென்னை பெருநகர காவல்துறையின் ஆணையா் ஏ.கே.விசுவநாதன், காப்பகத்தை திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில் தலைமையிட காவல் கூடுதல் ஆணையா் எச்.எம்.ஜெயராம், இணை ஆணையா் ஏ.ஜி.பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

குழந்தைகள் நல காப்பகம் தினந்தோறும் கால 9 மணி முதல் இரவு 7 மணிவரை இயங்கும். இந்த கட்டடம் மழலையா் பள்ளி மற்றும் குழந்தைகள் நல காப்பகமாகவும் இயங்கும். குழந்தைகளைப் பராமரிக்கவும், ஆரம்ப பாடங்கள் கற்பிக்கவும் நன்கு படித்த பெண் காவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். மேலும் குழந்தைகளைக் கவனித்துக் கொள்வதற்காக அரசால் நியமிக்கப்பட்ட இருவா் பணியில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com