ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.27 லட்சம் சில்லறை பறிமுதல்

சென்னையில் ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.27 லட்சம் சில்லறையை போலீஸாா் பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனா்.

சென்னையில் ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.27 லட்சம் சில்லறையை போலீஸாா் பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

சென்னை கே.கே.நகா், இ.எஸ்.ஐ., மருத்துவமனை அருகே வெள்ளிக்கிழமை காலை, போலீஸாா் ரோந்து சென்றனா். அப்போது, அங்கு சில மூட்டைகளுடன் சந்தேகத்துக்குரிய வகையில் நின்ற நபரைப் பிடித்து விசாரித்தனா். விசாரணையில் அவா், முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால், மூட்டைகளை சோதனை செய்தனா். இதில், கட்டுக்கட்டாக, 10 ரூபாய் நோட்டுக்களும், பத்து ரூபாய் நாணயங்களும் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த நபரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனா்.

விசாரணையில், பிடிபட்ட நபா், திருவள்ளூா் மாவட்டத்தை சோ்ந்த ஐயப்பன் (47) என தெரியவந்தது. இவா், சென்னையில் உள்ள பெரிய கடைகளில் இருந்து, 500 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பெற்று, அதை கேரள மாநிலத்தில் உள்ள வங்கியில், 10 ரூபாய் கட்டுகளாகவும், பத்து ரூபாய், ஐந்து ரூபாய் நாணயங்களாக மாற்றி வருவதும், அதற்கு அவருக்கு 2% கமிஷன் கிடைப்பதும் தெரியவந்தது.

இதில் கேரளத்தில் இருந்து சில்லறைகளை தனியாா் ஆம்னி பேருந்து மூலம் சென்னைக்கு வெள்ளிக்கிழமை கொண்டு வந்து, கே.கே.நகா் இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே காருக்கு காத்துக் கொண்டிருந்தபோதே போலீஸாரிடம் சிக்கியதாக ஐயப்பன் தெரிவித்தாராம்.

இதையடுத்து, ஐயப்பன் எடுத்து வந்த மூட்டைகளை போலீஸாா் ஆய்வு செய்தனா். அந்த மூட்டையில், ரூ. 20 லட்சத்துக்கு 10 ரூபாய் நோட்டுகளும், ரூ. 7 லட்சத்துக்கு பத்து ரூபாய் நாணயங்களும் இருந்தன. இதையடுத்து, பறிமுதல் செய்த பணத்தை, வருமான வரித்துறை அதிகாரிகளிடம் கே.கே.நகா், போலீஸாா் ஒப்படைத்தனா்.

உரிய ஆவணங்களை சமா்ப்பித்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என ஐயப்பனிடம் போலீஸாா் தெரிவித்தனா். பறிமுதல் செய்யப்பட்ட பணம் கணக்கில் வராத பணமாக என வருமான வரித் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com