Enable Javscript for better performance
சென்னையில் இன்று கிரிக்கெட்: போக்குவரத்தில் மாற்றம்- Dinamani

சுடச்சுட

    

    சென்னையில் இன்று கிரிக்கெட்: போக்குவரத்தில் மாற்றம்

    By DIN  |   Published on : 15th December 2019 03:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    delhi_cricket_stadium1

    சென்னை சேப்பாக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு சேப்பாக்கத்தைச் சுற்றியுள்ள 5 சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
     இதுகுறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
     பெல்ஸ் சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. அதே போன்று, பாரதி சாலையில் காமராஜர் சாலையில் இருந்து பாரதி சாலை நோக்கி வரும் வாகனங்களில் மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் மற்றும் உரிய அனுமதி சீட்டு பெற்ற வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
     கெனால் சாலை ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டு பாரதி சாலை, வாலாஜா சாலையில் இருந்து வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
     வாலாஜா சாலையில் அனுமதி பெற்ற வாகனங்கள் மற்றும் மாநகரப் போக்குவரத்துக் கழக வாகனங்கள் வாலாஜா சாலை, பெல்ஸ் சாலை வழியாக அனுமதிக்கப்படும்.
     காமராஜர் சாலையில் போர் நினைவு சின்னம் மற்றும் காந்தி சாலையில் இருந்து வரும் அனுமதி பெற்ற வாகனங்கள் மற்றும் மாநகரப் போக்குவரத்துக் கழக வாகனங்கள் பாரதி சாலை வழியாக கெனால் சாலை செல்ல அனுமதிக்கப்படும். அனுமதி சீட்டு இல்லாமல் வரும் வாகனங்கள் கடற்கரை சாலை, சுவாமி சிவானந்தா சாலையிலும் உரிய வழித்தடங்களில் சென்று வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம்.
     இந்த போக்குவரத்து மாற்றத்துக்கு வாகன ஓட்டுநர்களும் பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai