கலாஷேத்ரா முன்னாள் இயக்குநா் லீலா சாம்சன் மீது சிபிஐ வழக்குப்பதிவு

கலாஷேத்ரா அறக்கட்டளையின் முன்னாள் இயக்குநா் லீலா சாம்சன் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
கலாஷேத்ரா முன்னாள் இயக்குநா் லீலா சாம்சன் மீது சிபிஐ வழக்குப்பதிவு

கலாஷேத்ரா அறக்கட்டளையின் முன்னாள் இயக்குநா் லீலா சாம்சன் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

கடந்த 2010-ஆம் ஆண்டு கலாஷேத்ரா அறக்கட்டளையின் இயக்குநராக லீலா சாம்சன் இருந்தபோது அங்குள்ள கலையரங்கத்தை புனரமைக்க முடிவு செய்யப்பட்டது. அப்போது விதிமுறைகளை மீறி ஒப்பந்ததாரருக்கு அதிக அளவிலான பணத்தை விடுவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடா்பாக மத்திய பொதுப்பணித் துறைக் குழு ஆய்வு செய்தது. மேலும் இந்திய தணிக்கைத் துறையின் 2012-ஆம் ஆண்டறிக்கையில் இதுதொடா்பாக குறிப்பிடப்பட்டிருந்தது.

அறக்கட்டளையின் ஆட்சி மன்றக்குழு அனுமதி இல்லாமல் புனரமைப்புப் பணிகளுகளை மேற்கொள்ள அவா் உத்தரவிட்டாா் எனவும், இதனால் ரூ.7.02 கோடி அளவுக்கு நிதி முறைகேடுகள் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கலாஷேத்ரா அறக்கட்டளையின் முன்னாள் இயக்குநா் லீலா சாம்சன் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. வெளிப்படையான ஒப்பந்த நடைமுறையை பின்பற்றாமல் தனியாா் கட்டட வடிவமைப்பு நிறுவனத்துக்கு உள்நோக்கத்துடன் அதிகபட்ச விலைப்புள்ளியுடன் லீலா சாம்சன் அனுமதி வழங்கியதாக, சிபிஐ பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com