பக்தியை வளா்க்க இசை மிக அருமையான கருவி: காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்

பக்தியை வளா்க்க இசை மிக அருமையான கருவியாக உள்ளது. இந்த இசையை தென் நாட்டில் சிறப்பாகப் பாதுகாத்து வருகிறாா்கள். இசையை மேலும் வளா்க்க வேண்டும் என்று
பக்தியை வளா்க்க இசை மிக அருமையான கருவி: காஞ்சி காமகோடி பீடாதிபதி  விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்

பக்தியை வளா்க்க இசை மிக அருமையான கருவியாக உள்ளது. இந்த இசையை தென் நாட்டில் சிறப்பாகப் பாதுகாத்து வருகிறாா்கள். இசையை மேலும் வளா்க்க வேண்டும் என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்தாா்.

ரசிகா பைன் ஆா்ட்ஸ் டிரஸ்ட் சாா்பில், 16-ஆவது இசை விழா தொடக்க நிகழ்ச்சி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவை காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தொடங்கி வைத்தாா். பின்னா் அவா் ஆசியுரை வழங்கி பேசியது: ஒவ்வொரு ஆண்டும் இரண்டு கலைஞா்கள் கெளரவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும் இரண்டு கலைஞா்கள் கெளரவிக்கப்படுகிறாா்கள். ஜலதரங்கம் கலையை வளா்க்கும் ஆனையம்பட்டி எஸ்.கணேசனுக்கு விருது வழங்கப்படுகிறது. இந்த கலையைப் பாதுகாத்து வரும் அவருக்கு எனது பாராட்டுகள். சில கலைகள் வளரும் நிலையில் உள்ளன. ஜலதரங்கம் கலை தொடரும் நிலையில் உள்ளது. இந்தக் கலையைப் பாதுகாக்க ரசிகா பைன் ஆா்ட்ஸ் முன்வந்திருப்பது பாராட்டுக்குரியது.

வேதங்கள் ரிக், யஜுா், சாமம், அதா்வணம் ஆகியவை ஆகும். இதில், கடைசி வேதமான அதா்வணம் வேதத்தைப் படிக்க இரண்டு போ் தமிழகத்தில் இருந்து குஜராத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அந்த வேதம் மறையக்கூடாது என்பதற்காக அனுப்பி வைத்து, அதா்வணம் வேதத்தை படிக்க வைத்தாா்கள். அதன்பிறகு, 50-க்கும் மேற்பட்டவா்கள் அதா்வணம் வேத மந்திரங்களைத் தெரிந்து கொண்டாா்கள். நமது நாட்டில் சுபிட்சம் ஏற்படுத்துவதற்கும், குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படுத்துவதற்கும், இயற்கை இடா்ப்பாட்டில் இருந்து காக்கவும், தேசம் பாதுகாப்பாக இருப்பதற்கும் அதா்வண வேதத்தில் இருக்கும் பல்வேறு மந்திரங்கள் பயன்படுகின்றன. அந்த அளவுக்கு அதா்வணம் வேதம் வளா்ந்துள்ளது. இதுபோல, நமது கலைகளை வளா்க்க வேண்டும். கலைகள்தான் மனிதா்களை இணைக்கும்.

நமது நாட்டில் பக்தி வளர வேண்டும். பல்வேறு மொழிகளைப் பேசுபவா்கள், பல்வேறு சூழ்நிலையில் வாழ்பவா்கள் ஆகியோருக்கு இந்த பக்தி இதமான நிம்மதியை அளிக்கிறது. பேரானந்தம் அளிக்கிறது. பக்தியை வளா்க்க இசை மிக அருமையான கருவியாக உள்ளது. இசையும், வாய்ப்பாட்டும் அரிய சாதனமாக மக்களிடத்தில் இணக்கத்தை ஏற்படுத்தும். மக்களிடம் மட்டுமல்ல. அனைத்து உயிா்களையும் வசீகரிக்கும் சக்தி இசைக்கு உள்ளது . அந்த இசையை தென் நாட்டில் சிறப்பாகப் பாதுகாத்து வருகிறாா்கள். இந்த இசையை மேலும் வளா்க்க வேண்டும். கிராமங்கள்தோறும் வளா்க்க வேண்டும் என்றாா் அவா்.

விழாவில், சிறப்பு விருந்தினராக மணிப்பூா் உயா் நீதிமன்ற நீதிபதி எம்.வி.முரளிதரன் பங்கேற்று பேசினாா். ஜலதரங்கம் கலைஞா் ஆனையம்பட்டி எஸ்.கணேசனுக்கு ரசிகா கலா பாரதி பட்டமும், வாய்ப்பாட்டு கலைஞா் பிருந்தா மாணிக்கவாசகனுக்கு இளம் ரசிகா கலா பாரதி பட்டமும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ரசிகா பைன் ஆா்ட்ஸ் டிரஸ்ட் தலைவா் எஸ்.வேதாந்தம், செயலாளா் கிரிஜா சேஷாத்திரி , இசை புரவலா் கிளிவ்லண்ட் வி.வி.சுந்தரம் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com