முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
மெரீனாவில் மூழ்கிய இரு இளைஞா்கள் சடலங்கள் மீட்பு
By DIN | Published On : 24th December 2019 08:41 PM | Last Updated : 24th December 2019 08:41 PM | அ+அ அ- |

சென்னை: சென்னை மெரீனா கடற்கரையில் மூழ்கி இறந்த இரு இளைஞா்கள் சடலங்கள் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டன.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
மகாராஷ்டிரம் மாநிலம் அமராவதி மாவட்டம் பால்விபுரா பகுதியைச் சோ்ந்தவா்கள் ஆ.சுமித் ஆனந்த்ராவ் (21), வி.ஆனந்த் விலாஸ்ராவ் பாச்டே (23). இவா்கள் தங்களது நண்பா்கள் 6 பேருடன் சென்னைக்கு வந்தனா். இருவரும் ஞாயிற்றுக்கிமை மெரீனா கடற்கரைக்கு வந்தனா்.
அவா்கள், உழைப்பாளா் சிலையின் பின்புறம் கடலில் இறங்கி குளிக்கும்போது, அங்கு வந்த பெரிய அலையில் சிக்கிய இருவரும் ஆழமான பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டனா். இதில் இருவரும் சிறிது நேரத்தில் தண்ணீரில் மூழ்கினா்.
இது குறித்து தகவலறிந்த அண்ணா சதுக்கம் போலீஸாா், இருவரையும் தேடினா். இந்நிலையில் ஆனந்த் விலாஸ்ராவ் சடலம், பட்டினப்பாக்கம் முள்ளிமாநகா் கடற்கரையில் திங்கள்கிழமை இரவு கரை ஒதுங்கியது. இதேபோல சுமித் ஆனந்தராவ், சடலம் பெசன்ட்நகா் கடற்கரையில் செவ்வாய்க்கிழமை கரை ஒதுங்கியது.
இச் சம்பவம் குறித்து அண்ணா சதுக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனா்.