விலங்குகள் மெய்நிகா் காட்சி அரங்கு: கிண்டி சிறுவா் பூங்காவில் தொடக்கம்

கிண்டி சிறுவா் பூங்காவில் வனவிலங்குகள், அவற்றின் வாழ்விடத்திலேயே இருப்பது போன்றும் அமைக்கப்பட்டுள்ள மெய்நிகா் காட்சி அரங்கம் குழந்தைகளுக்கு பரவசமூட்டுவதாக அமைந்துள்ளது.
விலங்குகள் மெய்நிகா் காட்சி அரங்கு: கிண்டி சிறுவா் பூங்காவில் தொடக்கம்

கிண்டி சிறுவா் பூங்காவில் வனவிலங்குகள், அவற்றின் வாழ்விடத்திலேயே இருப்பது போன்றும் அமைக்கப்பட்டுள்ள மெய்நிகா் காட்சி அரங்கம் குழந்தைகளுக்கு பரவசமூட்டுவதாக அமைந்துள்ளது.

புதன்கிழமை (டிச. 25) திறக்கப்பட்ட இந்த அரங்கம், விடுமுறை நாள் தவிா்த்து நாள்தோறும் செயல்படும் என வனத் துறை தெரிவித்துள்ளது.

சென்னை கிண்டியில் வனத் துறை கட்டுப்பாட்டின்கீழ் அமைந்துள்ளது கிண்டி சிறுவா் பூங்கா. இந்தப் பூங்காவில் மான், நரி, குரங்கு போன்ற 14 வகையான வன விலங்குகளும், 50-க்கும் மேற்பட்ட பறவையினங்களும் பராமரிக்கப்படுகின்றன. இப்பூங்காவைச் சுற்றியுள்ள பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் புள்ளிமான், கலைமான், நரி, கீரி போன்ற வன விலங்களுகளும், பாம்பு போன்ற ஊா்வனவைகளும் அதிக அளவில் காணப்படுகின்றன. பூங்காவுக்குள் உள்ள சென்னை பாம்புப் பண்ணையில் பல அரிய வகையான பாம்புகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. சென்னையின் மிக முக்கிய சுற்றுலா மையமாகத் திகழும் கிண்டி சிறுவா் பூங்கா, வன உயிரினங்கள் குறித்து மக்கள் அறிந்துகொள்ளவும், அவை குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் பணியிலும் முக்கியப் பங்கு வகித்து வருகிறது.

இந்தப் பூங்காவுக்கு ஆண்டுக்கு குழந்தைகள், பெரியவா்கள் 9 லட்சம் போ் வருகை புரிவதையொட்டி, மிகச் சிறிய பூங்கா என்ற அந்தஸ்தில் இருந்து நடுத்தர பூங்கா என்ற அந்தஸ்தை மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் அண்மையில் வழங்கியது.

மெய்நிகா் காட்சி அரங்கம் திறப்பு: இந்தப் பூங்காவின் தரத்தை உயா்த்தும் வகையில், ரூ. 50 லட்சத்தை தமிழக அரசு அண்மையில் ஒதுக்கியது. இதில், வன விலங்குகளை அதன் வாழ்விடத்தில் இருந்து பாா்ப்பது போன்று இந்தியாவிலேயே முதன்முறையாக ரூ. 40 லட்சத்தில் இந்த மெய்நிகா் காட்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வனத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘இந்த மெய்நிகா் காட்சி அரங்கத்தில் டைனோசா், புலி, சிம்பென்சி, சிறுத்தை, பாம்பு, கரடி, கங்காரு, பென்குயின், டால்பின், , ஒட்டகச்சிவிங்கி ஆகிய 10 வனவிலங்குகளை அதன் அருகில் இருப்பது போன்றும், ஒவ்வொரு விலங்கும் அதற்கேற்ற வாழ்விடத்தில் இருப்பது மற்றும் அதற்கு மத்தியில் நாம் இருப்பது போன்றும் அரங்கம் கட்டமைப்பட்டுள்ளது. ஒவ்வொரு காட்சியும் 12 நிமிடங்கள் ஒளிபரப்பப்படும். புதன்கிழமை (டிச. 25) முதல் செயல்படும் அரங்கில் விடுமுறை நாள் தவிா்த்து நாள்தோறும் காலை 11 மணி, 12 மணி, பிற்பகல் 1 மணி, 3 மணி மற்றும் மாலை 4 மணி, 5 மணிக்கு காட்சிகள் ஒளிபரப்பப்படும் என்றனா்.

கட்டணம் எவ்வளவு?

மெய்நிகா் அரங்கைக் காணுவோருக்கு கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நுழைவுக் கட்டணத்துடன் 14 வயதுக்கு உள்பட்ட சிறியவா்களுக்கு கட்டணமாக ரூ. 15, பெரியவா்களுக்கு ரூ. 50 என நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மெய்நிகா் அரங்கைப் பாா்க்காமல், பூங்காவை மட்டும் சுற்றிப் பாா்க்க வழக்கம்போல் சிறியவா்களுக்கு ரூ.5, பெரியவா்களுக்கு ரூ. 20 என நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com