கைதான பிரசாத்திடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட போலி அடையாள அட்டை.
கைதான பிரசாத்திடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட போலி அடையாள அட்டை.

பிரதமரின் பாதுகாப்பு அதிகாரி எனக்கூறி  போலி அடையாள அட்டையுடன் காரில் உயர்நீதிமன்றத்துக்குள் நுழைந்தவர் கைது

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்துக்குள் பிரதமரின் பாதுகாப்பு அதிகாரி என போலி அடையாள அட்டையுடன் காரில் வந்து வழக்குரைஞர்கள் மீது மோதிய நபரை போலீஸார் கைது செய்தனர். 


சென்னை உயர்நீதிமன்ற வளாகத்துக்குள் பிரதமரின் பாதுகாப்பு அதிகாரி என போலி அடையாள அட்டையுடன் காரில் வந்து வழக்குரைஞர்கள் மீது மோதிய நபரை போலீஸார் கைது செய்தனர். 
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தினுள் செவ்வாய்க்கிழமை நுழைந்த  கார் ஒன்று தாறுமாறாக ஓடியது. இந்த கார் வழக்குரைஞர்கள் மீது மோதியது.  அந்த காரில் இருந்த பிரசாத் என்பவரை பிடித்து விசாரித்தனர். 
அப்போது அவர் தன்னை பிரதமரின் பாதுகாப்பு அதிகாரி எனக்கூறி அடையாள அட்டையை காண்பித்தார். ஆனால் அவர் வந்த காரில் சிபிஐ என ஸ்டிக்கர் ஒட்டியிருந்தது. இதனால் சந்தேகமடைந்த வழக்குரைஞர்கள் காரை சோதனை செய்தனர். அப்போது, பிரசாத் சிபிஐ அதிகாரி, சர்வதேச போலீஸ் அதிகாரி என்பது உள்ளிட்ட பல்வேறு போலி அடையாள அட்டைகள் வைத்திருப்பதை கண்டுபிடித்தனர். இதனைத் தொடர்ந்து,  பிரசாத்தை எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் விசாரணை மேற்கொண்ட போலீஸார்,  காரையும், போலி அடையாள அட்டைகளையும் பறிமுதல் செய்தனர். 
விசாரணையில் அந்த கார் தியாகராயநகரைச் சேர்ந்த வியாபாரி ஒருவருக்குச் சொந்தமானது என்பது தெரியவந்தது. அந்த காரின் உரிமையாளர் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து,    பிரசாத் மற்றும் கார் ஓட்டுநர் மோகனவேலு ஆகியோரை கைது செய்தனர். இந்த சம்பவம் உயர்நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com