சுடச்சுட

  


  கடந்த ஆண்டில் மாநிலம் முழுவதும் 16,876 மின் திருட்டு சம்பவங்கள் கண்டறியப்பட்டு, அதற்கான இழப்பீட்டு தொகையாக ரூ.65 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.
  இதுகுறித்து மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்ட செய்தி: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள அமலாக்கப்பிரிவு மூலம்  வீடுகள், வணிக வளாகங்கள், தொழில் நிறுவனங்கள்
  ஆகியவற்றில் மின் திருட்டு நிகழ்வுகள் நடைபெறுவதைத் தடுப்பதற்கான  ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, கடந்த ஆண்டு மட்டும் 16,876 மின் திருட்டு சம்பவங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதன்பேரில் இழப்பீட்டுத்தொகையாக ரூ.65 கோடி வசூலிக்கப்பட்டது.  நிகழாண்டு ஜனவரியை எடுத்துக் கொண்டால் 509 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு, ரூ.3.9 கோடி அபராதம் விதிக்கப்பட்டது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai