சுடச்சுட

    

    வங்கக்கடலில் நிலநடுக்கம்: சென்னையில் அதிர்வு உணரப்பட்டது 

    By DIN  |   Published on : 13th February 2019 04:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    bay-of-bengal


    சென்னைக்கு கிழக்கு, வடகிழக்கு திசையில் சுமார் 600 கி.மீ. தொலைவில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் சென்னையில் பல்வேறு இடங்களில் உணரப்பட்டது. 
    சென்னையில் இருந்து வடகிழக்கே சுமார் 600 கி.மீ. தூரத்தில் வங்கக்கடலில் செவ்வாய்க்கிழமை காலை 7.02 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆகப் பதிவானது.இந்த நிலநடுக்கம் சென்னையில் பெரம்பூர், கொளத்தூர் உள்பட பல்வேறு இடங்களில் உணரப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
    இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் கூறியது: இந்திய நேரப்படி காலை 7.02 மணிக்கு மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் சென்னைக்கு கிழக்கு, வடகிழக்கு திசையில் சுமார் 600 கி.மீ. தொலைவில் கடலுக்குள் 10 மீட்டர்  ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக இருந்தது. இந்த நிலநடுக்கம் வட அந்தமான், சென்னை, போர்ட்பிளேர் பகுதிகளில் உள்ள நில அதிர்வு பதிவு அளவீடு கருவிகளில் பதிவாகியுள்ளது. லேசான நிலநடுக்கம் என்பதால், சுனாமி எச்சரிக்கை அபாயம் ஏற்படவில்லை என்றார் அவர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai