சுடச்சுட

  


  இரண்டு நாள் இணைய அறிவியல் கருத்தரங்கம் சென்னை ஐஐடி-யில் திங்கள்கிழமை தொடங்கியது. பிரிட்டனைச் சேர்ந்த தன்னார்வ அமைப்பான இணைய அறிவியல் அறக்கட்டளையும், சென்னை ஐஐடி-யும் இணைந்து இந்தக் கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்துள்ளன. இதுகுறித்து சென்னை ஐஐடி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
  இணைய அறிவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வித் திட்டங்களுக்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த உலகத் தரத்திலான ஆய்வகங்கள் உதவும் வகையில், சர்வதேச தொடர்பை ஏற்படுத்தும் பணியை இந்த இணைய அறிவியல் அறக்கட்டளை செய்து வருகிறது.
  இந்தக் கருத்தரங்கு மூலம், இந்திய இணைய அறிவியல் ஆராய்ச்சியாளர்கள், சர்வதேச ஆராய்ச்சியாளர்களுடன் ஆராய்ச்சி தொடர்பான தகவல்கள், சந்தேகங்களை பரிமாறிக் கொள்ளுதல், கூட்டு ஆராய்ச்சி போன்றவற்றுக்கு வழிவகுக்கும் என ஐஐடி பேராசிரியர்கள் தெரிவித்தனர். இதனையொட்டி தகவல் அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கான ராபர்ட் போஸ்ச் மையம் தொடங்கி வைக்கப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai