Enable Javscript for better performance
ரூ.7 கோடி மதிப்புள்ள அரிய வகை கடல் உயிரினங்கள் பறிமுதல்: இருவர் கைது- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை

    ரூ.7 கோடி மதிப்புள்ள அரிய வகை கடல் உயிரினங்கள் பறிமுதல்: இருவர் கைது

    By DIN  |   Published On : 28th February 2019 04:14 AM  |   Last Updated : 28th February 2019 04:14 AM  |  அ+அ அ-  |  

    sea

    சென்னை மண்ணடியில் உள்ள ஒரு தனியார் கிடங்கில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள்.


    சென்னை மண்ணடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.7 கோடி மதிப்பிலான அரிய வகை கடல் உயிரினங்களை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து, மேலும் இருவரை கைது செய்தனர்.
    இது குறித்து சுங்கத்துறையினர் வட்டாரத்தில் கூறப்பட்டதாவது:
    சென்னை மண்ணடியில் உள்ள ஒரு தனியார் கிடங்கில் அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சுங்கத்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில், சுங்கத்துறை அதிகாரிகள் கடந்த திங்கள்கிழமை அந்த கிட்டங்கியில் திடீர் சோதனை நடத்தினர். இச் சோதனையில் அங்கு ரூ.7 கோடி மதிப்புள்ள அரிய வகை கடல் உயிரினங்களான கடல் குதிரை, கடல் அட்டை, சுறா மீன் எலும்புகள் மற்றும் அரிய வகை வன உயிரினமான எறும்புத் தின்னியின் செதில்கள் ஆகியவை இருப்பது கண்டறியப்பட்டது.
    சீனாவுக்கு கடத்த முயற்சி: இதில் எறும்புத் தின்னியின் செதில்கள் 111 கிலோவும், கடல் குதிரை 160 கிலோவும், கடல் குதிரை வகையைச் சேர்ந்த மீன்கள் 180 கிலோவும், கடல் அட்டை 5 கிலோவும், கடல் சுறா எலும்புகள் 79 கிலோவும் என மொத்தம் 660 கிலோ அரிய வகை உயிரினங்களின் பதப்படுத்தப்பட்ட எலும்புகள், ஓடுகள், மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
     இது தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள், அங்கிருந்த இருவரை கைது செய்து விசாரணை செய்தனர். விசாரணையில், அரிய வகை உயிரினங்கள் ராமேசுவரம், காசிமேடு பகுதியில் இருந்து கடத்திக் கொண்டு வரப்பட்டிருப்பதும், மண்ணடியில் உள்ள கிட்டங்கியில் இருந்து சாலை மார்க்கமாக மும்பைக்கு கடத்த திட்டமிட்டிருந்ததும், மும்பையில் இருந்து சீனா மற்றும் தெற்காசிய நாடுகளுக்கு விமானம் மூலம் கடத்த திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.
    மருந்துக்காக கடத்தல்:
    இதில் எறும்புத் தின்னியின் செதில்கள் இலங்கையைச் சேர்ந்த நபர், கடத்தல் கும்பலிடம் விற்றிருப்பது சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்துள்ளது. எறும்புத் தின்னியின் செதில்கள் சீனாவுக்கு மருந்து தேவைக்கும், சுறாவின் எலும்புகள் சூப் வைப்பதற்கும் கடத்தப்படுவதும் தெரியவந்தது. இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட அரிய வகை உயிரினங்கள் அனைத்தும் தமிழக வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
    இது தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருக்கும் கடத்தல் கும்பலைச் சேர்ந்த பிற நபர்களை தேடி வருகின்றனர்.


     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp