வன்முறையைத் தவிர்க்க மத நல்லிணக்க உரையாடல் தேவை: அமைச்சர் பாண்டியராஜன் வலியுறுத்தல்

வன்முறையைத் தவிர்க்க மத நல்லிணக்க உரையாடல் இன்றைய தேவையாக உள்ளது என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்தார். 
வன்முறையைத் தவிர்க்க மத நல்லிணக்க உரையாடல் தேவை: அமைச்சர் பாண்டியராஜன் வலியுறுத்தல்


வன்முறையைத் தவிர்க்க மத நல்லிணக்க உரையாடல் இன்றைய தேவையாக உள்ளது என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்தார். 
டெவலப்பர்ஸ் இந்தியா அமைப்பு சார்பில், குருநானக்தேவின் 550-ஆவது ஆண்டு விழா சென்னையில் உள்ள ரஷ்ய கலாசார மையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில், கர்நாடக இசை கலைஞர் அருணா சாய்ராமுக்கு துடிப்பான இந்தியர் விருதை அமைச்சர் க.பாண்டியராஜன் வழங்கினார். பின்னர் அவர் பேசியது: 
தமிழகத்தில் 6-ஆம் நூற்றாண்டில் 100-க்கு 40 சமணர்களும், 100-க்கு 40 பௌத்தர்களும் இருந்தனர். அதன்பிறகு, மிகப்பெரிய வன்முறை நடந்துள்ளது. இப்போது, அவர்களின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது. அந்த காலக்கட்டத்தில், மதத்தின் பெயரால் வன்முறை நடந்துள்ளது. 
இன்றைய சூழலில் போர், வன்முறையை தவிர்க்க மத நல்லிணக்கம் முக்கியமாக இருக்கிறது. வெவ்வேறு வகையான தீவிரவாதம் தலைதூக்கி நிற்கும் காலகட்டத்தில், மத நல்லிணக்க உரையாடல் மிகவும் கடினமானதாக இருக்கிறது. மத நல்லிணக்க உரையாடலில், எல்லாரும் ஒன்றாக கூடுவது, கருத்துகளைப் பரிமாறுவது போன்றவை முக்கிய தேவையாக இருக்கிறது. 
எல்லா மதங்களில் உள்ள வேற்றுமைகளைவிட நமக்குள் இருக்கும் ஒற்றுமைகளை தெரிந்து கொள்ளவேண்டும். நமது அடையாளங்களை தெரிந்துகொள்ள வேண்டும். ஆழமாக புரிதல் வர வேண்டும். மத நல்லிணக்க உரையாடல் முயற்சியை வளர்க்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com